ஆடி போய் ஆவணி வந்தாச்சு! டாப்பில் வருமா காங்கிரஸ்? ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் வியூகம் இதுதானா!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கான பணிகளில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்து வருகிறது. அதே நேரம், இந்த கூட்டணியை விமர்சித்து தேர்தலில் வென்றுவிடலாம் என பாஜக கணக்கு போட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
2ம் கட்ட தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
3ம் கட்ட தேர்தல்: மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், ஜம்மு காஷ்மீர் சென்று, தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். குறிப்பாக இங்கு, பாஜக வெறும் 20 தொகுதிக்குள் முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் 41 தொகுகளை மட்டுமே பெறும் என்று கணக்கீடுகள் கூறுகின்றன.
காங்கிரஸின் கணக்கீடு என்ன?: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் முடிவுகளை அடிப்படையாக எடுத்துக்கொண்டால், 34 சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சியும், 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மை பெற 46 தொகுதிகளை வெற்றி கொள்ள வேண்டும். வெவ்வேறு யுக்திகளை கொண்டு, மீதமுள்ள தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம் என காங்கிரஸ் நம்பியிருக்கிறது. ஆனால், இந்த நம்பிக்கைக்கு, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணியே வேட்டு வைக்கும் என்பதுதான் இதில் டிவிஸ்ட்.
இதுதான் டிவிஸ்ட்: மக்களவை தேர்தலில் இந்துக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், தேசிய மாநாட்டு கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக, "ஹரி/சங்கராச்சாரியார் மலையின் பெயரை தக்த்-இ-சுலைமான் மாற்றுவோம்" என்று கூறியிருக்கிறது. அதேபோல, அடிக்கடி மோதலை தவிர்க்க பாகிஸ்தானுடன், இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. இது போதுமே பாஜக தனது வாக்குவங்கியை உயர்த்த.
பாஜகவின் கணக்கு இதுதான்: காங்கிரஸ், ஆர்டிகள் 370 ரத்து பிரச்னையை கையில் எடுத்தால்.. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேசிய மாநாட்டு கட்சியின் வாக்குறுதியை பாஜக கையில் எடுக்கும். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 47 இடங்கள் காஷ்மீரிலும், 43 இடங்கள் ஜம்முவிலும் உள்ளன. ஜம்மு பிராந்தியத்தில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் 30 தொகுதிகளிலும் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக உறுதியாக இருக்கிறது.
அதிலும் ரஜோரியில் 7 தொகுதிகளில் பாஜக கொடியை தவிர வேறு கொடி எதுவும் பறக்க கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறது. மக்களவை தேர்தல் முடிவுகளும், பாஜகவுக்கு சாதகமாகத்தான் இருக்கின்றன. அதாவது 29 சட்டமன்ற தொகுதிகளில் பாஜகதான் டாப்.
வேட்பாளர்கள்: காஷ்மீரை பொறுத்தவரை, பள்ளத்தாக்கில் உள்ள 25 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹப்பக்கடல், பாரமுல்லா உள்ளிட்ட பள்ளத்தாக்கின் வேறு சில இடங்களில் பண்டிட்களை வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த பகுதியில் இடம் பெயர்ந்த பண்டிட்கள் சுமார் 1.22 லட்சம் பேர் இருக்கின்றனர். இது மிகப்பெரிய வாக்கு வங்கி.
மீதமுள்ள 22 இடங்களில் சுயேச்சைகள் மற்றும் உள்ளூர் கட்சிகளின் வேட்பாளர்களை பாஜக ஆதரிக்க முடிவெடுத்திருக்கிறது. இப்படியாக பாஜகவும், காங்கிரசும் தங்களது திட்டங்களை வகுத்துள்ளன.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா












Click it and Unblock the Notifications