மண்வாசனையை பிடித்து அப்படியே பாட்டிலில் அடைத்து... செஞ்சுட்டாங்க பாஸ் செஞ்சுட்டாங்க!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: வானம் தூறல் போடத் தொடங்கும் போது வீசும் மணமணக்கும் மண் வாசனையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட வாசனையை அப்படியே வாசனைத்திரவியமாக பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்த வாசனைத் திரவியத்தை மிட்டி எனக் குறிப்பிடுகின்றனர்.

இது இந்தியாவின் வாசனைத் திரவியங்களின் தலைநகர் எனக் குறிப்பிடப்படும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கஜூஜில் தயாரிக்கப்படுகிறது.

தரத்திற்கேற்ற விலை...

தரத்திற்கேற்ற விலை...

இதன் 10கிராம் விலை ரூ. 120லிருந்து ரூ. 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கிலோ கணக்கில் ரூ. 38 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை, அதன் தூய்மைத்தன்மையைப் பொறுத்து விற்பனையாகிறது. சிலவற்றில் கூடுதலாக சந்தன எண்ணெயும் சிறிதளவு சேர்க்கப்படுகிறது.

களிமண்...

களிமண்...

முதலில் குறிப்பிட்ட அளவு களிமண்ணை எடுத்து காப்பர் பாத்திரத்தில் அடைத்து வேக வைக்கிறார்கள். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்து இந்த வாசனைத் திரவியத்தை தயாரிக்கிறார்கள்.

மருந்தாகிறது...

மருந்தாகிறது...

சுமார் 120 வருடங்களாக பரம்பரை பரம்பரையாக வாசனைத் திரவியம் விற்பனை செய்து வரும் பிரபல வியாபாரிகள் இந்த மிட்டி, மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தாக பயன்படுவதாக கூறுகின்றனர். மனதிற்கு புத்துணர்ச்சியைத் தந்து மனச்சோர்வை நீக்க உதவுகிறதாம் இந்த வாசனைத் திரவியம்.

விற்பனை அமோகம்...

விற்பனை அமோகம்...

மழைக்காலங்களை விட வெயில் காலங்களில் இந்த வாசனைத் திரவியத்தின் விற்பனை அமோகமாக இருக்கிறதாம். அடிக்கிற வெயிலுக்கு இந்த மண்வாசனை வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்வதன் மூலம் மழை பெய்வது போன்ற மனநிலைக்கு மக்கள் செல்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+