பிள்ளைவரம் கேட்டுப் போன பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி – மந்திரவாதி கைது
டெல்லி: டெல்லியில் பெண் ஒருவரை, மந்திரவாதி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி ஏழாண்டுகள் ஆனவர்.
ஆனால், இத்தனை வருடங்கள் கழிந்தும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார்.
மந்திரவாதியிடம் குமுறல்:
தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண் டெல்லியின் மோகன் நகர் பகுதியில் உள்ள மாந்தரீக நிலையத்திற்கு சென்று அங்குள்ள மந்திரவாதியிடம் தனது மனக்குறையை கூறினார்.
பணம் பிடுங்கிய மந்திரவாதி:
இதையடுத்து அவருக்கு ஆலோசனைகளைச் சொன்னார் மந்திரவாதி. இதேபோல இரண்டு "கன்சல்டேஷன்களை" வைத்த அவர், ஆயிரக்கணக்கான ரூபாயை அவரிடம் கறந்துக் கொண்டார்.
அமானுஷ்ய சக்தி மூலம்:
மேலும், அந்த மந்திரவாதி, அமானுஷ்ய சக்தியை வரவழைத்து, அதன் மூலம் குழந்தை வரத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறி, அதற்கான நல்ல "நாளை" குறித்துத் தந்து அனுப்பினார்.
பாலியல் பலாத்கார முயற்சி:
அந்த "சுபமுகூர்த்த சுபதினமான" நேற்று முன்தினம் அந்த மாந்தரீக நிலையத்துக்கு சென்றபோது, அந்தப் பெண்ணை மயக்கிய தலைமை மந்திரவாதி, தனது சிஷ்ய மந்திரவாதிகள் இருவருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
போலீஸ் கைது:
அவர்களது பிடியில் இருந்து விடுபட்டு ஓடிவந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து அமானுஷ்ய சக்தியுடன் இருப்பதாக கூறி வந்த 3 மந்திரவாதிகளையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேண்டாம் தவறான பாதை:
இதுபோன்ற தவறான பாதைகளில் சென்றால் நமக்கு இப்படிப்பட்ட கொடுமைகள்தான் நடக்கும் என்ற வகையில் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications