கர்நாடகா: ஓடும் நீரில் நின்று செல்ஃபி எடுத்த 3 மருத்துவ மாணவர்கள் பலி
பெங்களூரு: செல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

(படத்தில், இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி செல்பி) மருத்துவ முகாம் முடிவடைந்த பிறகு மூன்று மாணவர்கள், இரண்டு மாணவிகள் மட்டும் ஹூலிவானா கிராமத்திற்குச் சென்றனர். அங்குள்ள கால்வாய் ஒன்றில் ஒரு மாணவர் மட்டும் கால்வாய் கரையோரம் நின்றும், நான்கு பேர் கால்வாய் தண்ணீரில் இறங்கியும் செல்ஃபி எடுத்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் நால்வரும் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த கெரகோடு காவல்நிலைய போலீசார், தண்ணீரில் மூழ்கிய மாணவர்கள் நால்வரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், ஜீவன் ,சுருதி ஆகியோரை போலீசார் கிராம மக்களின் உதவியுடன் மீட்டனர்.
இதில் மாணவி சுருதி சடலமாக மீட்கப்பட்டார். உயிருக்கு போராடிய ஜீவனை, போலீசார் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜீவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு மாணவி சிந்து, காயங்களுடன் மீட்கப்பட்டார்.
மேலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இன்னொரு மாணவரான கிரீசின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து, கெரகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் செல்ஃபியினால் அதிக மரணங்கள் நடைபெற்று வரும் நிலையில் மருத்துவ மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications