Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil
கட்டட இடிபாடு
BBC
கட்டட இடிபாடு

திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.திருநெல்வியில் டவுன் செல்லும் சாலையில் உள்ளது சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து உள்ளது.இதில் குறைந்தபட்சம் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தங்களது சக மாணவர்கள் உயிரிழந்த கோபத்தில் பள்ளியில் கற்களை கொண்டு எறிந்தும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும் அப்பள்ளி மாணவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதனப்படுத்தி வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் விபத்து நடந்த பள்ளியை நேரில் பார்வையிட்டார்.

கழிவறை இடிபாடு.
BBC
கழிவறை இடிபாடு.

இது குறித்து நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், பள்ளியின் கழிப்பறை சுவர் கட்டப்பட்ட இடத்தில் ஃபவுண்டேசன் என்பது இல்லை என தெரிகிறது, இதனாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது, மருத்துவமனையிலும் சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன்.

முதல் கட்டமாக அன்பழகன், விஸ்வரஞ்சன் ஆகிய இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சஞ்சய் என்ற மாணவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். மேலும் அபுபக்கர், இசக்கிபிரகாஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.விபத்து நிகழ்ந்த பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்த மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் பின்செய்தியாளர்களிடம் பேசியபோது, தற்போது பள்ளியில் நடந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை யார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை இருப்பினும், தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும . என்றார்.இதனிடையே நெல்லையில் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உறுதி தன்மை மற்றும் விபத்து எப்படி நடந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, முழு விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+