சீனா அதிபர் வருகைக்கு எதிர்ப்பு- 3வது நாளாக டெல்லியில் திபெத்தியர்கள் போராட்டம்!
டெல்லி: சீனா அதிபர் ஜின்பிங்கின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக டெல்லியில் திபெத்தியர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர்.
இந்தியாவுக்கு 3 நாள் அரசுப் பயணமாக நேற்று முன் தினம் சீனா அதிபர் ஜின்பிங் வருகை தந்தார். குஜராத் மாநிலம் அகமதபாத் சென்றுவிட்டு அங்கிருந்து டெல்லி திரும்பினார்.

அப்போது திபெத் விடுதலை கோரும் இயக்கத்தினர் டெல்லியில் சீனா தூதரகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இரு நாடுகளிடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த ஹைதராபாத் இல்லம் முன்பாகவும் திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். சிலர் மின்கம்பங்களில் ஏறி நின்று முழக்கமிட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இன்று 3வது நாளாகவும் சீனா அதிபரின் இந்திய வருகையை எதிர்த்து திபெத்தியர்கள் போராட்டத்தை டெல்லியில் நடத்தினர். ஜின்பிங் தங்கியுள்ள தாஜ் ஹோட்டல் எதிரே இன்று திபெத்தியர்கள் போராட்டத்தை நடத்தினர்,












Click it and Unblock the Notifications