மைனர் சிறுவனை வைத்து ஸ்கெட்ச்.. ரயில் மூலம் எஸ்கேப்.. டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு மூவர் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நேற்று கொலை முயற்சி தாக்குதல் நடந்தது. அவரது காரை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியிருந்திருந்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் கோட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். டைகர் ஷெராப்பை கொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கால்பந்து விளையாடி விட்டு திரும்பிய டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார்.

Tiger Shroff Firing Tiger Shroff

மூன்று பேர் கைது

இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹரியானா மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும், அவர்களில் ஒருவர் மைனர் எனவும் சொல்லப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஆன்டி-கேங்ஸ்டர் டாஸ்க் ஃபோர்ஸ் மற்றும் கோட்டா போலீசார் இணைந்து நடத்திய ஆபரேஷனில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டாவின் ரயில்வே காலனி பகுதியில் 3 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் புனே-ஜெய்ப்பூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை சுமார் 10.15 மணிக்கு கோட்டா வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருக்கும் இடம் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுவன்

கைது செய்யப்பட்டவர்கள் பூல் சிங், ரெஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் இதில் கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் மைனர் சிறுவன் ஆவர். பீகாரை சேர்ந்த 17 வயது சிறுவனையும் போலீசார் துப்பாக்கி சூடு தொடர்பாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதலில் ஜூஹு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின்னர் மும்பை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிஷ்னோய் கும்பல்

இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. மேலும், புதிய வார்னிங்கையும் கூட இந்த கும்பல் வெளியிட்டுள்ளது. அதில் சல்மான் கானுடன் இருக்கும் அனைவருக்கும் இதே கதிதான் என மிரட்டல் விடுத்துள்ளது. சல்மான் கான் மன்னிப்பு கேட்காத வரை, அவரையும் நிம்மதியாக இருக்க விட மாட்டோம், அவரை சுற்றி இருப்பவர்களையும் நிம்மதியாக இருக்க விட மாட்டோம் என பிஷ்னோய் கேங் எச்சரித்துள்ளது.

பின்னணி

ராஜஸ்தானில் 1990களின் இறுதியில் ஷூட்டிகிற்காக ராஜஸ்தான் சென்றபோது சல்மான் கான் இரு கலைமான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிஷ்னோய் சமூகத்தினர் அந்த குறிப்பிட்ட வகை கலைமான்களை புனிதமாகவும் கடவுளுக்கு இணையாகவும் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே சல்மான் கானை அந்த கும்பல் குறிவைத்திருக்கிறது. அதேநேரம் சட்டப்படி பார்க்கும்போது, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலில் தண்டிக்கப்பட்ட சல்மான் கான், பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+