5 நாட்கள் தாண்டியும் சிறையில் இருக்கும் CJP தலைவர்கள்.. நீதிபதி சொன்ன காரணத்தை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக, அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்கள் (CJP) சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டு 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். ஆனால் 5 நாட்கள் கடந்த பின்னரும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றனர்.

தனக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மிரட்டல் வருவதாக கூறி, நீதிபதி ஜாமீன் கொடுக்காமல் தாமதிக்கிறார் என்று CJP குற்றம்சாட்டியிருக்கிறது.

CJP

சவுரவ் தாஸ் கைது

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லி ஜந்தர் மந்தரில் CJP தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. போராட இடம் இருந்தால்தானே போராடுவீர்கள்? என்று கணக்கு போட்ட மத்திய அரசு.. ஜந்தர் மந்தர் பகுதியை போராட அனுமதிக்கப்பட்ட இடம் என்கிற பட்டியலிலிருந்து நீக்கியது. ஆனாலும், விட்டுக்கொடுக்காத CJP அமைப்பினர், அக்.13 அன்று ஜந்தர் மந்தரில் நுழைந்து தேசிய கொடியை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வளவு நடந்த பின்னரும் மத்திய அரசு சும்மா இருக்குமா? இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதற்காக சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. அவர்கள் மீது தடையை மீறுதல், அத்துமீறி நுழைதல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும், பொது அமைதியை குலைக்க முயன்றதாக நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கும் என 2 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அக்.14ம் தேதி பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் முந்தைய மற்றும் தற்போதைய நடத்தைகள் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா என 2 பேருக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. நேற்றுடன் இவர்களின் 5 நாட்கள் காவல் நிறைவடைந்த நிலையில், காவல்துறை திட்டமிட்டு அவர்களின் ஜாமீன் நடைமுறைகளை தாமதப்படுத்துவதாக CJP செய்தித் தொடர்பாளர் ரத்னா சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

மதியம் 12 மணிக்கு நடக்க வேண்டிய விசாரணை மாலை 5 மணி வரை தள்ளி வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தனக்கு மிரட்டல் வருவதாக கூறி நீதிபதி ஜாமீனை ஏற்காமல் காலம் தாழ்த்துவதாகவும் CJP குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தை அடுத்து தங்களது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்போவதாக CJP தரப்பு தெரிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+