ஐந்து தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு தயாராகும் தவெக.. திருச்சியில் மாநாடு நடத்த விஜய் திட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கிடைத்த வெற்றியால் தவெக தலைமை மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. அடுத்தாக விராலிமலை, திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, உள்பட ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக ஆளும் கட்சியான தவெக திருச்சியில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கும், கட்சியினரை உள்ளாட்சி தேர்தலுக்கு உற்சாகப்படுத்துவதும், இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.

முன்னதாக ஆளும் கட்சியான பின்னர் நடைபெற உள்ள இந்த முதல் மாநாட்டை திருச்சி அல்லது திருநெல்வேலியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் திருச்சிக்கே அதிக வாய்ப்புள்ளதாகவு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து தொகுதிகளில் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் ஆகிய மூன்று தொகுதிகள் திருச்சி மாவட்டத்தின் அருகில் இருக்கிறது. அதேநேரம் பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகியவை இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் மற்ற இரு தொகுதிகள் ஆகும்.

TVK prepares for by-elections Vijay plans to hold a state-level conference in Trichy

தவெக தொடங்கப்பட்ட பிறகு நடைபெறவுள்ள மூன்றாவது மாநில அளவிலான மாநாடு என்பதால் கட்சியின் அமைப்புரீதியான தயார்நிலையை மதிப்பாய்வு செய்வது, தொண்டர்களின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, இடைத்தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது ஆகியவற்றுக்கு இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் என்று கட்சி தலைமை நினைக்கிறதாம்.

திருச்சி மாவட்டம் தவெகவுக்கு முக்கியமான தேர்தல் மையமாக இருக்கிறது. ஏனெனில் இங்கு உள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளில் திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், துறையூர், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி ஆகிய ஆறு தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. திருச்சி மேற்கில் மட்டுமே திமுகவின் கேஎன் நேரு வெற்றி பெற்றிருந்தார். திருச்சி கிழக்கில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் மாநாட்டைத் திருச்சியில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதற்கான முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

அதேநேரம் தவெக தனது முதல் அரசியல் மாநாட்டை 2024 அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தியது. இந்த மாநாட்டில் எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் தன்னெழுச்சியாக பங்கேற்றார்கள். அப்போது கட்சித் தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், இருமொழிக் கொள்கை, ஜனநாயகம் ஆகியவற்றை வலியுறுத்தி கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை முன்வைத்தார்.

இதையடுத்து, 2025 ஆகஸ்ட் 21-ஆம் தேதி மதுரையில் தனது இரண்டாவது மாநாட்டை விஜய் தலைமையிலான தவெக நடத்தியது. அப்போது நேரடியாக பாஜக மற்றும் திமுகவை விஜய் விமர்சித்தார். அதேநேரம் எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோரை பாராட்டிப் பேசினார். மதுரை மாநராட்டில் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை விவரித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் விஜய்.

தற்போது ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல்களும் வரப்போகிறது. அதற்கு தவெக தயாராகி வருகிறது.. இந்த இரண்டு தேர்தல்களுக்குமான ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்கும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைப்பதற்கும் திருச்சி மாநாட்டைப் பயன்படுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாம்.

திருச்சியில் நடைபெறத் திட்டமிடப்படும் மாநாடு தவெகவுக்கு பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதைக் கடந்து, தனது ஆட்சியின் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். உள்ளூர் பிரச்சினைகளை நன்கு அறிந்த கட்சி நிர்வாகிகளுடன் தலைமை தனது தொடர்பை வலுப்படுத்தி, மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும். அதேநேரத்தில், பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்கும் மாநாட்டைப் பாதுகாப்பாக நடத்துவதுடன், கட்சியின் அமைப்புரீதியான பணிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வியூகம் குறித்தும் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இத்தகைய எதிர்பார்ப்புகளைச் செயல்பாடுகளாக மாற்றுவதில்தான் இந்த மாநாட்டின் அரசியல் முக்கியத்துவம் அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+