முந்தா நாள் பெய்த மழையை விட! வேளச்சேரியில் டிசம்பரில் மோசமான வெள்ளம்! எச்சரிக்கும் நிபுணர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் வரும் நவம்பர் - டிசம்பர் மாதம் பெய்யும் மழையால் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ் ஆகிய கல்லூரிகளின் வெள்ள முன்னெச்சரிக்கை நிபுணத்துவம் கொண்ட முன்னாள் மாணவர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: வேளச்சேரி பகுதி மக்கள் நேற்று முன் தினம் பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை காட்டிலும் வரும் நவம்பர்- டிசம்பர் மாதத்தில் மோசமான வெள்ளத்தை சந்திக்கக் கூடும்.

velachery

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி, கோவளம் நில பகுதிகள் உள்ளிட்டவைகளில் உள்ள நீர் நிலைகள் இன்னும் மழைநீரைத் தாங்கும் அளவுக்கு கொள்ளளவை கொண்டுள்ளன. அதே சமயம் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி போன்ற பகுதிகளில் தற்போது மழை நீர் பெரிதும் தேங்கியுள்ளதற்கு முக்கியக் காரணமே அந்த பகுதி பள்ளமான நிலப்பரப்பை கொண்டிருக்கிறது.

இந்த பகுதியில் போதுமான மழைநீர் வடிகால் அமைப்புகளுமே இல்லை. இதனால்தான் ஒரு நாள் மழைக்கே இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது. வரும் காலங்களில் இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காதவண்ணம் இருக்க, வடிகால் அமைப்புகளை போதிய அளவு அமைப்பதும், ஏற்கெனவே இருப்பதை தூர்வாருவதும் ஆகும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மழைக் காலங்களில் தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், மடிப்பாக்கம், வரதராஜநகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்குவது வழக்கம். மற்ற இடங்களிலும் மழை நீர் தேங்கும். ஆனால் அது வடிவதற்கு கால நேரம் என்பது குறைவு. ஆனால் மேற்கண்ட பகுதிகளில் தேங்கும் போதே இடுப்பளவில்தான் தொடங்கும் என்பதால் அத்தனை எளிதில் வடியாது. இதனால் அந்த மழைநீரிலேயே மக்கள் பயணிக்கும் நிலை ஏற்படும். இது சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிக கனமழை பெய்ததால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

அது போல் குடியிருப்பு பகுதிகள், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்ததாக சொல்லப்படுகிறது.

சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் பெய்தது எதிர்பாராத மழை என்கிறார்கள். இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இரவு நேரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகளுடன் இணைந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

அதுபோல் எங்கெல்லாம் வெள்ள பாதிப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் அதிகாரிகளையும், ஊழியர்களையும் அனுப்பியிருந்தார். மேலும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இரவோடு இரவாக மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் நேற்று காலை மழை பெய்த தடயமே தெரியாத அளவுக்கு சாலைகளும், குடியிருப்பு பகுதிகளும் இருந்தன. இதற்கு முக்கிய காரணம் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள்தான் என்கிறார்கள். மோட்டார் போட்டு தண்ணீரை எங்கே வெளியேற்ற முடியும்? மழைநீர் வடிகால்களில்தானே! அதற்கு அந்த மழைநீர் வடிகால்களின் உள்கட்டமைப்புகள் சீராக இருத்தல் அவசியம். இந்த பணிகளுக்காக கடந்த ஆட்சியில் 4000 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டது. அதுதான் இப்போது ஆபத்பாண்டவனாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+