சென்னையில் 2,372 நிவாரண முகாம்கள் தயார் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பொதுமக்கள் தங்குவதற்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை பெறுவதற்கும் தேவையான வசதிகளுடன் 2,372 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் பெய்த கனமழையால், நகரின் ஆறு இடங்களில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 36 சென்டி மீட்டர் மழை பதிவானது. கத்திவாக்கம், மீனம்பாக்கம், சென்னை சென்ட்ரல், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் அதிகனமழை பெய்தது.

Sengottaiyan rain

சென்னையில் மேகவெடிப்பு காரணமாக பெய்த அதிகனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் சாலையில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சென்னை மழையால் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர், 2 முதல் 3 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாநகராட்சி மற்றும் வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் பொதுமக்கள் தங்குவதற்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை பெறுவதற்கும் தேவையான வசதிகளுடன் 2,372 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மரங்கள் விழுதல், மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட அவசர நிலைகள் ஏற்பட்டால், 10771070112 என்ற பேரிடர் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வடகிழக்குப் பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையான அளவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் 1 லட்சத்து 4,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கும் இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 250 படகுகளுகளும், மீனவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+