Times Now ETG: பூஜ்யம்! திரிணமூல் காங்கிரஸுக்கு மரண அடி.. கோவாவை போல் மேகாலயாவிலும் சறுக்கும் மம்தா
மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் என டைம்ஸ் நவ் நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.
ஷில்லாங்: மேகாலயாவில் இந்த முறையும் என்பிபி கட்சிக்கே மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். எனினும் அந்த கட்சி பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் இந்த கட்சி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கப்பட்டு ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
மேகாலயாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கான்ராட் சங்கமாவின் என்.பி.பி கட்சி மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 18 இல்தான் வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 21 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். இந்த நிலையில் கான்ராட் சங்மா புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாஜக, இதர உதிரி கட்சிகளுடன் இணைந்து ஆட்சிக்கு வந்தார்.
இந்த நிலையில் என்பிபி பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. இந்த 2023 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலில் என்பிபி கட்சி 57 தொகுதிகளிலும் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது. 74. 32 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தேர்தல் முடிந்தது
இந்த தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி Times Now-ETG Research நிறுவனத்தின் கணிப்புகளின்படி மேகாலயாவில் பாஜக 3-6 இடங்களிலும் காங்கிரஸ் 2-5 இடங்களிலும் என்பிபி 18-26 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புள்ளது.

31 இடங்கள்
இந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க 31 இடங்களை அரசியல் கட்சிகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய டைம்ஸ் நவ் கருத்து கணிப்புகளின்படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. எனவே ஏற்கெனவே 2018 இல் பாஜக, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து என்பிபி ஆட்சியை பிடித்தது. அது போல் தற்போது முறிந்த கூட்டணியை ஒட்ட வைத்து மீண்டும் என்பிபி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

கருத்து கணிப்பு
இந்த கருத்துக் கணிப்புகளில் யார் மிகவும் பிரபலமான முதல்வர் வேட்பாளர் என மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு மக்கள் கான்ராட் சங்கமா முதல்வராக வேண்டும் என விரும்பி 23 சதவீத வாக்குகளையும் முகுல் சங்மாவுக்கு 26சதவீத வாக்குகளையும் காஷி பகுதியில் இருந்து யாராவது புதிய முகம் முதல்வராக வேண்டும் என 29 சதவீதம் பேர் சொல்லியுள்ளார்கள். யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை என 22 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

கான்ராட் சங்மா- முகுல் சங்மா
இதில் கான்ராட் சங்மாவும் முகுல் சங்காவும் காரோ பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். மேற்கண்ட கருத்து கணிப்பை வைத்து பார்த்தோமேயானால் சங்மாக்களின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று காஷி பகுதியை சேர்ந்த முகம் தெரியாத பழங்குடியினர் முதல்வராக வர மக்கள் விரும்புகிறார்கள். இந்த தேர்தலில் முகுல் சங்மா பில்டப் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெல்லாது என கணிப்புகள் சொல்கின்றன.

திரிணாமூல் காங்கிரஸுக்கு சறுக்கல்
இது திரிணமூலுக்கு பெரும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தை தாண்டி திரிணமூல் காங்கிரஸ் கட்சி சிறிய மாநிலங்களில் கால் பதித்து ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறது. அதற்கா முதன்முதலில் 2022 இல் நடந்த கோவா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கோவாவில் கால் பதித்தவுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்த முன்னாள் முதல்வர், முக்கிய நிர்வாகிகள் திரிணாமூலில் இணைந்தனர்.

கோவா கதை
இதனால் பாஜகவுக்கு மாற்றாக கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என நம்பப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் 40 தொகுதிகளில் 26 இடங்களில் போட்டியிட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. கிட்டதட்ட இதே நிலைதான் மேகாலயாவிலும் உள்ளது.

கோவா வரலாறு திரும்புகிறது
மேகாலயாவில் தடம் பதிக்க நினைக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காக காங்கிரஸில் இருந்து கடந்த தேர்தலில் 12 எம்எல்ஏக்களை பிரித்து அழைத்து வந்தார் முகுல் சங்மா. காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தில் கூட அமராத நிலையை ஏற்படுத்தினார். இந்த நிலையில் என்பிபியை விட திரிணாமூல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லும் என தீவிரபிரச்சாரம் செய்தார் முகுல். ஆனால் கிட்டதட்ட இரு அல்லது 3 கருத்து கணிப்பு முடிவுகளில் திரிணாமூல் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட இல்லை.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications