பாஜக பக்கத்தில் வர முடியாது.. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பிரமாண்ட வெற்றி.. டைம்ஸ் நவ் சர்வே
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே அடித்துச் சொல்லி உள்ளது.
மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா அல்லது பாஜக ஆட்சிக்கு வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறிவிட்டது. ஏனெனில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியான சில கருத்து கணிப்புகள் மம்தா பானர்ஜி எளிதாக வெற்றி பெறுவார் என்று தெரிவித்தன.
ஆனால் சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருப்பதாக தெரிவித்தன.

குழப்பத்தில் அரசியல்
நேற்று இரவு வெளியான ஏபிபி செய்தி சேனல் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க விரும்புவதாகவும் ஆனால் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நினைப்பதாகவும் ஒரு கணிப்பை வெளியிட்டு இருந்தது. இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது.

மம்தா பானர்ஜி முதல்வர்
அதே நேரம், இன்று டைம்ஸ் நவ் மற்றும் சி ஓட்டர் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 160 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அறுதிப் பெரும்பான்மை பலத்தை எளிதாக பெற்று மீண்டும் மம்தா பானர்ஜி முதல்வராக போது உறுதியாகிறது.

பாஜகவுக்கு லாபம்
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி 211 இடங்களை வென்றது. அந்த வகையில் பார்த்தால் இப்போது 51 இடங்களை அந்த கட்சி இழக்க போகிறது. ஆனால் அந்த தேர்தலில் பாஜக வெறும் 3 தொகுதிகளை வென்றது. ஆனால் இந்த தேர்தலில் அந்த கட்சி 112 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது . இதன் மூலம் 109 தொகுதிகளை கூடுதலாக பாஜக பெற உள்ளதாக தெரிவிக்கின்றது அந்த கருத்துக் கணிப்பு.

இடதுசாரிகள் நிலை
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள்- காங். கூட்டணிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைக்கும். 2016-ல் 76 இடங்களில் வென்ற இடதுசாரிகள் அணி 54 இடங்களை பறிகொடுக்கும் என்று சொல்கிறது டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பு. ஆக மொத்தம் பாஜகவுக்கு வளர்ச்சி, மற்ற கட்சிகளுக்கு இறங்குமுகம் என்கிறது கணிப்பு. ஆனால், மம்தா முதல்வராவதை பாஜகவின் வளர்ச்சி தடுக்க முடியாது என்பதுதான் இந்த சர்வே சொல்லும் சாராம்சம்.
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
தேர்தலில் வெறும் 822 வாக்குகள்! ஆனா ஓவர் நைட்டில் நாட்டிலேயே 5வது பெரிய கட்சியாக மாறிய NCPI.. எப்படி -
மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு!












Click it and Unblock the Notifications