தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமனம்!
டெல்லி : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத் தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ராஜேஷ் லக்கானி தலைமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருமங்கலம், ஆர்.கே.நகர் தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தினார். இதே போன்று குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இவரது மேற்பார்வையில் நடந்தது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து ராஜேஷ் லக்கானியை மாற்றிவிட்டுப் புதிய அதிகாரி ஒருவரை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இதன்படி சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குனராக உள்ள சத்யபிரதா சாஹு புதிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்யபிரதா சாஹு தனது பொறுப்பை ஏற்கும் வரை ராஜேஷ் லக்கானி தனது பணியைத் தொடர்வார் என்று தெரிகிறது. ராஜேஷ் லக்கானிக்கு வேறு பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications