கேரளா விபத்தில் உயிரிழந்த முருகன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
கேரளா சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை மறுக்கப்பட்டு மரணமடைந்த நெல்லை வாலிபர் முருகனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் நிதி அறிவித்துள்ளது.
கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த முத்துவுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரளாவில் பாரிப்பள்ளிகொல்லம் சாலையில், 6.8.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் கிராமம், மஜரா துரைகுடியிருப்பு மேலூரைச் சேர்ந்த கணபதியின் மகன் முருகன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சாலை விபத்தில், முத்து பலத்த காயமடைந்தார் என்பதை அறிந்து வருத்தமடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த முத்துவுக்கு 50 ஆயிரம் ரூபாயும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
Recommended Video

கேரளாவில் சாலை விபத்தில் காயமடைந்த நெல்லையை சேர்ந்த முருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுத்ததால், அங்கு அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்திற்கு சட்டசபையில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார். முருகனின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், முருகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications