19 ஆண்டுக்குப் பின் நாளை தமிழக காங். பொதுக்குழு... இந்த தீர்மானங்களை நிறைவேற்றத்தான்!
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் 19 ஆண்டுகளுக்குப் பின் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன என்கின்றன காங். வட்டாரங்கள்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. தமிழக காங்கிரஸிலும் கடந்த சில மாதங்களாக இப்பணி நடைபெற்று வந்தது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அகில இந்திய தலைவரை நியமிப்பதற்கு மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் ஒப்புதல் அவசியம்.

பொதுக்குழு உறுப்பினர்கள்
இதனால் காங்கிரஸ் மேலிடம் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கமிட்டியின் பொதுக்குழுவை கூட்டி அதன் தீர்மானத்தைப் பெற்று வருகிறது. இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களை நியமிப்பதிலும் காங்கிரஸ் தீவிரம் காட்டியது.

பொதுக்குழு கூட்டம் சென்னையில்
மாவட்டத்துக்கு 15 பொதுக்குழு உறுப்பினர்கள் அவசரகதியில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்களில் ஏகப்பட்ட அக்கப்போர்கள் என்பது தனி விவகாரம்.

தலைமை தாங்குவது?
இப்படி நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு நாளை பொதுக்குழு நடைபெற உள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு தேர்தல் அதிகாரிகள் சஞ்சய் தத், பாப்பிராஜூ ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். வழக்கமாக பொதுக்குழுவுக்கு திராவிட கட்சிகளில் தலைவர் அல்லது பொதுச்செயலர் தலைமை வகிப்பர். காங்கிரஸில் தேர்தல் அதிகாரிகளே தலைமை வகிக்கின்றனர்.

ராகுலுக்காக தீர்மானம்
இப்பொதுக்குழுவில் ராகுல் காந்தியை அகில இந்திய தலைவராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுத்து நியமிக்கும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications