தமிழக விவசாயிகளின் 9வது நாள் போராட்டம்… வேல்முருகன் நேரில் சென்று ஆதரவு
டெல்லியில் போராட்டம் 9 நாட்களாக போராட்டம் நடத்தும் விவசாயிகளை இன்று நேரில் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி டெல்லியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தற்காலிகமாக போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.
எனினும் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தமிழகத்திற்கு திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நூதன போராட்டம்
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மண்டை ஓடுகளுடனும், தூக்கு கயிறு போட்டுக் கொண்டும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து, நேற்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்கு குறித்து உறுதி அளித்தார். இன்றும் வேளாண்துறை அமைச்சர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வேல்முருகன் ஆதரவு
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று டெல்லி சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாயிகளை போன்று உடை அணிந்து விவசாயிகள் அமைத்துள்ள மேடையில் தானும் அமர்ந்து ஆதரவு தெரிவித்தார் வேல்முருகன்.

விவசாயிகள் உறுதி
முன்னதாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணுவிற்கு பொன்னாடை போர்த்தி வேல்முருகன் வாழ்த்து தெரிவித்தார். தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை தமிழகம் திரும்பப் போவதில்லை என்று விவசாயிகள் உறுதியோடு 9வது நாளாக இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications