கலக்கல் கடலூர்.. உலகமே நாளை திரும்பி பார்க்கப்போகுது! தமிழ்நாடு அரசு கொண்டு வரும் பிரம்மாண்டம்
காந்திநகர்: தமிழ்நாடு கடல் வணிகத்தின் மற்றுமொரு மைல் கல்லாக கடலூரில் புதிய திட்டத்தை தொடங்க இருப்பதாக அமைச்சர் எவ வேலு குஜராத்தில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டத்தில் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார்.

19வது கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் குஜராத் மாநிலம், கெவடியாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்குபெற்றனர்.
தமிழ்நாட்டின் சார்பாக, பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கு பெற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தீபகற்ப இந்தியா, குறிப்பாக பண்டைய தமிழ்நாடு, தென்கிழக்கு ஆசியா, இலங்கை மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இணைப்பில், ஒரு முக்கிய மையமாக விளங்கியது. கொற்கை, குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், அழகன்குளம், தேவிப்பட்டினம், நாகப்பட்டினம். பூம்புகார். கடலூர். அரிக்கமேடு. மரக்காணம், மாமல்லபுரம், பழவேற்காடு போன்ற பழங்காலத் தமிழக கடற்கரையோரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகங்கள் மற்றும் கோரமண்டல கடற்கரையில் உள்ள பல துறைமுகங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் கலாச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றிக்கொண்டிருந்தன.
திரு.வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1906-இல், பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் வ நிறுவனத்துடன் போட்டியிட. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவினார். கடல்சார் மற்றும் துறைமுகத் துறையில் முன்னோடியாக இருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடரவும். இந்தியாவை தற்சார்புடைய நாடாக மாற்றவும், தமிழ்நாடு சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதில் ஒரு செயலூக்கமான மற்றும் தாராளமான அணுகுமுறையை கொண்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலா திட்டத்தின்கீழ், மானியமாக தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கு சுமார் ரூ.120 கோடி நிதியுதவி அளித்த மத்திய அமைச்சருக்கும் மற்றும் இந்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒருங்கிணைந்த முடிவுகளுக்காக, ஆற்றல், தொழிற்துறை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட கடலின் பல பங்காளர்களை ஒன்றிணைக்கும் கடல் இடஞ்சார்ந்த திட்டமிடலில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.
கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். அதன் நீண்ட கடற்கரையை பயன்படுத்தி கடலோர சுற்றுலா. பொழுதுபோக்கு கடல்நீர் விளையாட்டுகளை வழங்குவதன் மூலம் நீல பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக்கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும்திறன் கொண்ட பசுமை வளத்துறைமுகத்தை உருவாக்கவும், தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குகளை இத்துறைமுகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது." என அவர் தெரிவித்து உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications