For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.150 கோடி மதிப்பு.. குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன் சிலை மீட்பு

குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன் சிலை மீட்பு- வீடியோ

    அஹமதாபாத்: குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலை நாளை தமிழகம் கொண்டு வரப்படும்.

    சோழ வம்சத்தை சேர்ந்த புகழ்பெற்ற மன்னரான ராஜராஜ சோழன், இந்தியா முழுக்க பல பகுதிகளை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. குமரி தொடங்கி இமயம் வரை பல பகுதிகளில் ராஜராஜசோழன் போர் தொடுத்து சென்றுள்ளார். அவரது மகன் ராஜேந்திர சோழனும் கடல்கடந்து போர் தொடுத்து சென்றுள்ளார்.

     TN police recovers Rajaraja Chozha staue form Gujarat Museum

    இவர்கள் பல நாடுகளை பிடித்த போது, அவர்களுக்கு, அந்தந்த பகுதிகளில் சிலைகள் நிறுவப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் இந்த சிலைகள் அப்படியே இருக்கிறது. தமிழக தொல்லியல் துறை பல சிலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருகிறது.

    இந்த சிலைகளின் மதிப்பு பல கோடிகளை தாண்டும். தற்போது குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலையை தேடி குஜராத் சென்ற தமிழக போலீஸ், சிலையை மீட்டுள்ளது. ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    ராஜராஜ சோழன் சிலையுடன் உலகமகாதேவி சிலையும் மீட்டது தமிழக போலீஸ். மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ 150 கோடி என ஐஜி பொன்மாணிக்கவேல் தகவல் தெரிவித்துள்ளார். 1000 ஆண்டுகள் பழமையானது என்பதால் இன்னும் அதிக விலை கூட இருக்க வாய்ப்புள்ளது.

    English summary
    Tamil Nadu police recovers Rajaraja Chozha staue form Gujarat Museum.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X