ஒடிஷாவில் பயிற்சி விமானம் விழுந்து விபத்து- தமிழக பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா உட்பட 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிஷாவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் தமிழக பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா உட்பட 2 பேர் பலியாகினர்.

ஒடிஷாவின் தென்கானல் மாவட்டத்தில் அரசு விமான பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2 இருக்கைகள் கொண்ட விமானம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

TN Trainee pilot killed in trainer aircraft crashes in Odisha

இன்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குட்டி விமானம் எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் பயிற்சியாளர் கேப்டன் சஞ்ஜிப் குமார் ஜா மற்றும் பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா இருவரும் உயிரிழந்தனர்.

பயிற்சியாளர் கேப்டன் சஞ்ஜிப் குமார் ஜா பீகாரைச் சேர்ந்தவர்; பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+