For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பில்டிங் ஸ்ட்ராங்கு.... பேஸ்மெண்ட் வீக்கு...." - தமிழக போக்குவரத்து கழகம் குறித்து அமைச்சர் பதில்

நவீன தொழில்நுட்பத்தில் பிறமாநிலங்களை விட தமிழக போக்குவரத்து கழகம் முன்னோடியாக இருப்பதாக கூறியுள்ள தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், ஆனால் அது நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மோட்டர் வாகன திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் நிதின் கட்கரியை சந்தித்த விஜயபாஸ்கர், தமிழகம் சார்பாக மோட்டார் வாகன திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். வரிவசூல், குறிப்பிட்ட வழித்தடத்தை தனியாருக்கு தாரைவார்ப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.

TN transport corporation is modern but its in loss

சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் 5 பிரதான திருத்தங்களுக்கு தமிழகம் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு விரைவில் பரிசீலிக்கும் என கட்கரி தெரிவித்துள்ளார், எனக் கூறினார்.

பிறமாநிலங்களை விட தமிழகம் போக்குவரத்துதுறையில் நவீனமயமாக இருப்பதாக கூறினார். மேலும் துறை சார்ந்த பல விஷயங்களில் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்ததாக கூறிய அவர், தற்போது போக்குவரத்து கழகம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் கூறினார்.

English summary
TN Transport minister Vijayabhaskar met the Union Minister Nitin Gadkari and filed his comment against Motor vehicle act. He registered that TN transport corporation is modern when compared to other states and said but ironically it is in loss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X