கர்நாடகாவில் தாக்குதலுக்கு உள்ளான தமிழக லாரி டிரைவர்.. காப்பாற்ற மனைவி மனு
பெங்களூர்: காவிரி பங்கீடு தொடர்பான கலவரம் உச்சத்தில் இருந்தபோது, கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த நைஸ் சாலையில், தமிழக லாரி டிரைவர் ஒருவர் லுங்கியை அவிழ்த்து, ஜட்டியோடு நிற்க வைத்து கன்னட அமைப்பினர் தாக்கிய வீடியோ வெளியாகி தமிழகத்தில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
அந்த டிரைவர் பெயர் மணிவேல் (33). திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள கல்பாறை கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன். இன்னும் அங்கிருந்து தமிழகம் வர முடியாமல் தவித்து வருகிறார். அவர் மனைவி என் கணவரை மீட்டு தாருங்கள் என்று முசிறி ஆர்.டி.ஓ. ஜானகியிடம் மனு கொடுத்திருக்கிறார்.

நாமக்கல்லில் உள்ள லாரி தென் முருகன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றுபவர் மணிவேல். கடந்த 12ம் தேதி மதியம் மங்களூரில் இருந்து, பெங்களூ நகருக்கு காஸ் நிரப்ப வந்தபோது நைஸ் சாலையில் வைத்து 20 பேர் கும்பலால் இந்த மோசமான தாக்குதல் நடைபெற்றது.
பெங்களூருவுக்கு அருகில் 7 கி.மீ. தொலைவில் உள்ள பாரத் காஸ் நிறுவன வளாகத்தில் லாரியை நிறுத்திவிட்டு அங்கே பாதுகாப்பாக உள்ளாராம் மணிவேல். அங்குள்ள கேன்டீனில்தான் தினமும் சாப்பிடுகிறார். அங்கிருந்து, வெளியே போக அஞ்சியுள்ளார். எனவே தமிழக அரசு அவரை சொந்த ஊர் அழைத்துவர உதவ வேண்டும் என்பது அவரின் குடும்பத்தார் கோரிக்கை.
பேஸ்புக் மூலம் தமிழகத்தை சேர்ந்த சில மனிதாபிமானிகள் பணம் திரட்டி ரூ.2500-ஐ அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். அதை எடுக்க கூட முடியாமல் இருக்கிறாராம் மணிவேல். இயல்பு நிலை திரும்பிவிட்டதாக கர்நாடக அரசு கூறிவரும் நிலையில், தமிழக லாரி டிரைவர் நிலைமை அந்த தகவலை பொய்ப்பிப்பதாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications