இவர்தான் சரியான ஆள்.. இந்தியாவிற்கு எதிராக.. 22 வயது இளைஞரை இறக்கிய ஆஸி.. "ட்ரம்ப் கார்டாமே".. ஏன்?
நாக்பூர்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி உள்ளது. நாக்பூரில் நடக்கும் இந்த போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி முக்கியமான பவுலர் ஒருவரை களமிறக்கி உள்ளது.
நாக்பூரில் நடக்கும் இந்த டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிக முக்கியமான டெஸ்ட். டெஸ்ட் போட்டிகளில் சமீப காலங்களில் ஆஸ்திரேலியா சரியாக ஆடவில்லை. பாட் கும்மின்ஸ் கேப்டனாக வந்த பின்புதான் மீண்டும் ஆஸ்திரேலியா பார்மிற்கு வந்து உள்ளது.
அதற்கு முன்பாக வரிசையாக இரண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர்களை இந்தியாவிடம் ஆஸ்திரேலியா இழந்துவிட்டது. அதிலும் கடைசி தொடரில் கப்பாவில் ஆஸ்திரேலியா இந்தியா மோசமான தோல்வி அடைந்தது. கில், பண்ட் இணை ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்ததை காட்டுக்குள் சுற்றி திரியும் கங்காருகள் கூட மறக்காது.

இந்தியா
இன்னொரு பக்கம் டெஸ்ட் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு செல்லும் முனைப்பில் இருக்கும் இந்தியாவும் இந்த தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முக்கியமாக ரோஹித் சர்மா தலைமையிலான அணி ஆடுவதால் இந்த தொடர் இந்தியாவிற்கும் மிக முக்கியமானது ஆகும். இந்த நிலையில் தற்போது நாக்பூரில் இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடங்கி உள்ளது. இதில் ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா(கேட்ச்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத்(வ), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கீப்பர்
கீப்பராக பாரத் சேர்க்கப்பட்டு உள்ளார். இன்னொரு பக்கம் ஓப்பனிங் வீரராக ராகுலுக்கு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. நன்றாக ஆடிக்கொண்டு இருக்கும் கில்லிற்கு பதிலாக ராகுல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இது போக மிடில் ஆர்டரில் பண்ட் இல்லாத காரணத்தால் அதிரடியாக ஆடும் வீரர் சூர்யா குமார் யாதவ் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். அஸ்வின் - ஜடேஜா ஜோடி மீண்டும் அணிக்குள் வந்துள்ளது. அக்சர் பட்டேலும் இருப்பதால் பேட்டிங் மிக சிறப்பாகவே உள்ளது. மூன்று ஆல் ரவுண்டர் உள்ளனர். பிட்ச் ஸ்பின் பிட்ச் என்பதால் முகமது ஷமி, முகமது சிராஜ் என்று இரண்டு பாஸ்ட் பவுலர்கள் மட்டுமே எடுக்கப்பட்டு உள்ளனர்.

பிட்ச்
இன்னொரு பக்கம் பிட்ச் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. நாக்பூர் பிட்ச் கியூரேட்டர் அபிஜீத் பிப்ரோடுடன் ராகுல் டிராவிட் இது தொடர்பாக பேசி இருக்கிறார். இதனால் பிட்சில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி பிட்சில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பிட்சில் குறைவான புற்கள் இருக்கும், பிட்ச் பெரும்பாலும் வறண்டு, பிளாட்டாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக ஆஸ்திரேலியாவின் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் திணறும் வகையில் ஒரு பக்கம் புற்களை செதுக்கி அவர்களுக்கு ஏற்றபடி பிட்ச் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியா
இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (வ), பாட் கம்மின்ஸ் (கேட்ச்), நாதன் லியோன், டாட் மர்பி, ஸ்காட் போலண்ட் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இதில் டாட் மர்பி அதிகம் கவனிக்கப்பட்டு உள்ளார். இவர் ஆப் ஸ்பின் பவுலர். பிட்ச் ஆப் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இவரை ட்ரம்ப் கார்ட் போல ஆஸ்திரேலிய அணி களமிறக்கி உள்ளது. கடந்த 2021 மார்ச் மாதம்தான் இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் லிஸ்ட் ஏ பிரிவில் அறிமுகம் ஆனார். இவருக்கு வெறும் 22 வயதுதான் ஆகிறது.

ஆஸ்திரேலியா
பிக்பாஸ் லீக், விக்டோரியா அணிகளில் ஆடி வந்த இவர் ஆஸ்திரேலியாவின் ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இதுவரை ஆடவில்லை. நேரடியாக தற்போது டெஸ்ட் அணிக்குள் வந்துள்ளார். தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் பிட்ச் ஆப் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டு உள்ளது. பிட்சின் இரண்டு பக்கமும் ஒரு பாதி மட்டும் புற்கள் மொத்தமாக நீக்கப்பட்டு வறண்டு காணப்படுகிறது. இதனால் இன்று டாட் மர்பியின் பவுலிங் அதிகம் கவனிக்கப்படும். ஆஸ்திரேலிய அணி இவர் இந்தியாவிற்கு எதிராக டிரம்ப் கார்டாக பயன்படுத்தும் என்று முன்பே கணிக்கப்பட்டு இருந்த நிலையில், அதன்படியே அவர் களமிறக்கப்பட்டு உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications