16 மாநிலங்களில் இன்று விடுமுறை.. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் ஜாக்பாட்.. முழு லிஸ்ட்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் விழாவையொட்டி பொதுவிடுமுறை, அரைநாள் விடுமுறை என மொத்தம் 16 மாநிலங்கள் அறிவித்துள்ளன. அந்த மாநிலங்களின் விபரம் வெளியாகி உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. பிரான் பிரதிஷ்டை என அழைக்கப்படும் இந்த விழாவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது நிரம்பிய குழந்தை பருவ ராமர் சிலைக்கு சக்தி வழங்கும் பூஜை, சடங்குகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்று மதியம் 12.15 முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ராமர் சிலைக்கு ஆரத்தி உள்ளிட்ட சடங்குகளை செய்ய உள்ளார். இந்த விழாவை காண பக்தர்களுக்கு ராமர் கோவிலில் அனுமதி இல்லை. கோவில் நிர்வாகம் மற்றும் உத்தர பிரதேச அரசு சார்பில் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே நேரில் விழாவில் பங்கேற்க முடியும்.
மற்றபடி மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகள் மூலமும், காணொலி காட்சி மற்றும் டிடி தமிழ் உள்ளிட்டவற்றின் மூலம் தான் விழாவை காணலாம். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் விழாவையொட்டி பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களுக்கு அரைநாள் வரை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மதியம்2.30 மணிக்கு பிறகு பணியை தொடங்க உள்ளனர். மேலும் 16 மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்துள்ளன.
அதன்படி இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலகங்களுக்கு மதியம் 2.30 மணி வரை விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
திரிபுரா, ராஜஸ்தான், ஒடிசா, ஜம்மு காஷ்மீர், அசாம், ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், டெல்லி, உத்தரகாண்ட் இன்று மதியம் 2.30 மணி வரை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சண்டிகர், புதுச்சேரி யூனியன் பிரதேசம் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications