அடடா அதிசயம்.. இந்த நாள் போனா 4 வருசத்துக்கு திரும்ப வராது.. லீப் நாள் என்றால் என்ன? இதோ முழு தகவல்!
சென்னை: இன்றைய நாள் ரொம்பவே ஸ்பெஷல். காரணம், இந்த நாள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும். இன்றைய பிப்ரவரி 29ஆம் தேதியை திரும்ப பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் இன்னும் 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும். லீப் நாள் என்றால் என்ன? இது ஏன் வருகிறது? வாங்க பார்க்கலாம்.
லீப் ஆண்டு என்றால் என்ன?: பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவது நமக்குத் தெரியும். பூமி, 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகளில், ஒரு சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் 365 நாட்கள் மற்றும் 6 மணி நேரம். இதில் 365 நாட்களை நாம் ஓரு ஆண்டாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.

பூமி சூரியனை சுற்றி முடிக்க முந்நூற்றி அறுபத்தி ஐந்தே கால் நாட்கள் எடுத்துக் கொண்டாலும் நாம் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்றே கணக்கிடுகிறோம். ஒவ்வொரு ஆண்டிலும் மீதம் இருக்கும் அந்த 6 மணிநேரம், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்தமாக ஒரு நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை, அந்த ஒரு நாள் கணக்கிடப்படும் ஆண்டு லீப் வருடம் என அழைக்கப்படுகிறது.
பிப்ரவரி 29: பிப்ரவரி மாதத்தில் வழக்கமாக 28 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கூடுதலாக ஒரு நாள் கணக்கிடப்படும் லீப் ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக சேர்க்கப்படும். இதுதான் லீப் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த கணக்குப்படி ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒரு லீப் வருடம் வரும். அந்த ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் 29ஆம் தேதி வரும்.
கடைசியாக, கடந்த 2020ஆம் ஆண்டு லீப் வருடமாக இருந்தது. அதன் பிறகு இந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு லீப் வருடமாக இருக்கிறது. இன்றைய நாள் பிப்ரவரி 29 2024 (வியாழக்கிழமை) இந்த ஆண்டின் கூடுதல் நாளாக உள்ளது.
லீப் ஆண்டு தோன்றியது எப்படி?: முதன் முதலில் இந்த கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்தது ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசர். நாம் இப்போது பயன்படுத்தும் க்ரிகோரியன் காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த ஜூலியன் காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர்தான்.

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு லீப் ஆண்டாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு லீப் ஆண்டா, இந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 தேதி வருமா என்பதை கண்டறிய எளிமையான முறை உள்ளது. சரியாக நான்கால் வகுபடும் ஆண்டு லீப் வருடம் எனப்படும். உதாரணமாக 2000ஆம் ஆண்டு ஒரு லீப் ஆண்டாக இருக்கும். ஆனால், 2040ஆம் ஆண்டு லீப் ஆண்டாக இருக்கும். 2030 ஒரு லீப் ஆண்டு அல்ல.
4 வருடங்களுக்கு ஒருமுறைதான் உண்மையான பிறந்தநாளை கொண்டாட முடியும்: உலகில் சராசரியாக தினமும் சுமார் 3.5 லட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள். பிப்ரவரி 29ஆம் தேதியும் இதேபோல, லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் இந்த நாளில் பிறக்கும் அனைவரும் தங்கள் பிறந்தநாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் சரியான நாளில் கொண்டாட முடியும். மற்ற ஆண்டுகளில், மார்ச் 1 அல்லது, பிப்ரவரி 28 அன்றே பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் (1896), அர்ஜூனா விருது வென்ற பிரகாஷ் நஞ்சப்பா, கலாஷேத்ரா நிறுவனரும், பரதநாட்டிய கலைஞருமான ருக்மிணி தேவி (1904), ஹாக்கி வீரர் ஆடம் சிங்ளேர் (1984) ஆகியோர் பிப்ரவரி 29ஆம் தேதி லீப் வருடத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று என்ன செய்யப்போகிறீர்கள்?: இப்படிப்பட்ட, அதிசிறப்பு வாய்ந்த இந்த நாளில், நினைவில் கொள்ளத்தக்க விஷயங்களை பலரும் செய்வார்கள். இன்று ஃபேஸ்புக்கில் நீங்கள் ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் கூட, அந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி 29ஆம் தேதியன்று தான் மெமரீஸில் காட்டும். அந்த வகையில், ஸ்பெஷலான இன்றைய நாளில் நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்?
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications