இன்னைக்கு ஒன்னும் அவ்வளவு முக்கியமான நாள் இல்லை.. கூலாக சொல்லும் குமாரசாமி!
இன்றைக்கு ஒன்றும் அவ்வளவு முக்கியமான நாள் இல்லை என குமாரசாமி கூலாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: இன்றைக்கு ஒன்றும் அவ்வளவு முக்கியமான நாள் இல்லை என குமாரசாமி கூலாக தெரிவித்துள்ளார்.
நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வரும் கர்நாடக அரசியல் களத்தை நாடே உற்றுநோக்கி வருகிறது. அவசர அவசரமாக பாஜக பதவியேற்ற நிலையில், யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு கர்நாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. கர்நாடாகாவில் பாஜக ஆட்சி கவிழுமா அல்லது நீடிக்குமா என்பது இன்று மாலை 4 மணிக்கு மேல் தெரிந்து விடும்.

செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் காலை 11 மணிக்கு எம்எல்ஏக்கள் பதவி ஏற்க வேண்டும் என்பதால் ஹைதராபாத்தில் தங்கவைக்கப்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் இன்று காலை பெங்களூரு திரும்பினர். இதைத்தொடர்ந்து மஜத - காங்கிரஸ் கூட்டணியில் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

முக்கியமான நாள் இல்லை
அப்போது இன்றைய நாள் ஒன்றும் எனக்கு முக்கியமான நாள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான நாட்கள் எதிர்காலத்தில் வரும்.

வேட்டையாட முயற்சி
4 மணி வரை பாஜகவினர் எங்கள் எம்எல்ஏக்களை கள்ளத்தனமாக வேட்டையாட முயற்சிப்பார்கள். அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்றாகதான் உள்ளனர்.

யாரும் சிக்கவில்லை
எந்த எம்எல்ஏவும் எந்த பக்கமும் செல்லவில்லை. எங்கள் எம்எல்ஏக்கள் யாரும் சிக்கவில்லை. நானும் சித்தராமையாவும் ஒன்றாக செல்வோம். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications