குஜராத் சட்டசபை தேர்தல்.. விறுவிறு 2ஆம் கட்ட வாக்கு பதிவு.. பகல் 1 மணி வரை 34% வாக்குகள் பதிவு
அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி 34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
182 சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 63.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று முன் தினம் ஓய்ந்தது.
இன்று மொத்தம் 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 61 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அந்தவகையில் 285 சுயேச்சைகள் உள்பட 833 பேர் களத்தில் இருக்கிறார்கள். தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளிலும் பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. காங்கிரஸ் கட்சி 90 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளன. பிற கட்சிகளில் முக்கியமாக பாரதிய பழங்குடியினர் கட்சி 12 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 44 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் கணிசமான இடங்களில் போட்டியிடுகிறது. மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் (காட்லோடியா தொகுதி), படேல் இன தலைவர் ஹர்திக் படேல் (விரம்கம்), அல்பேஷ் தகோர் (காந்திநகர் தெற்கு), தலித் பிரிவு தலைவர் ஜிக்னேஷ் மேவானி (வட்காம்), எதிர்க்கட்சித்தலைவர் சுக்ராம் ரத்வா (ஜெட்பூர்) உள்ளிட்டோர் இன்று முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
அமைதியான முறையில் வாக்களிப்பதற்காக மேற்படி தொகுதிகளில் 14,975 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1.13 லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
சபர்மதி தொகுதியில் ராணிப்பில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வாக்கு சாவடிக்கு நடந்து சென்றார். அங்கு வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அவருக்கு முன்பு ஒரு பெண் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தார். அப்போது அந்த பெண் பிரதமரை வாக்களிக்குமாறு கூறினார். ஆனால் அவரோ வரிசைபடி நீங்கள் முதலில் வாக்களியுங்கள் என கூறினார். அந்த பெண் வாக்களித்த பிறகு பிரதமர் மோடி வாக்களித்தார். இந்த தொகுதி பாஜகவின் கோட்டை என சொல்லப்படுகிறது. இந்த கோட்டையில்தான் பிரதமர் மோடி வாக்களித்தார்.
அது போல் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் அகமதாபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். காலை 9 மணி நிலவரப்படி, அதாவது வாக்குப் பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் 4.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை 11 அளவில் 19.06 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அது போல் பகல் 1 மணி அளவில் 34.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications