மகாராஷ்டிராவில் சுங்கச் சாவடியை தாக்கி தீ வைத்த விஷமிகள்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சுங்கச் சாவடியில் உள்ள நான்கு மையங்கள் விஷமிகளால் தாக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் உள்ள ஒன்பது சாலைகளுக்கு சுங்க வரி வசூலிக்கும் சாவடி ஒன்று உள்ளது. சாலைகளே சரியாக இல்லாமல் உள்ள நிலையில் சுங்க வரி மட்டும் வசூலிக்கப்படுவதா என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுங்க வரி பிரச்சனை குறித்து சிலர் சுங்கச்சாவடியில் உள்ள 4 மையங்களை தாக்கி சேதப்படுத்தினர்.
மேலும் சுங்கச் சாவடியின் உடைமைகளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தனர். இந்த தாக்குதலை நடத்தியது சிவ சேனா கட்சியினர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.
இந்நிலையில் சுங்கச் சாவடியில் தாக்குதல் நடத்தியவர்களில் சிலரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சிவ சேனா கட்சி நாளை கோலாபூரில் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறுகையில்,
கோலாபூரில் நிலைமையை கண்காணித்து வருகிறேன். சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படக் கூடாது. சுங்க வரி பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம். மக்கள் அமைதி காத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications