‛நாளை கழுதைக்கு தெய்வத்தின் பெயரை சூட்டுவர்’.. சீதா - அக்பர் சிங்கம் சர்ச்சையில் விஎச்பி பரபர வாதம்
கொல்கத்தா: சிங்கத்துக்கு ‛சீதா' என பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கேட்டதற்கு, ‛நாளை கழுதைக்கும் தெய்வத்தின் பெயரை சூட்டலாம். அதனை தடுக்க வேண்டும். அதோடு சீதாவை தெய்வமாக வணங்குகிறோம். அவர் இருக்க வேண்டியது காட்டில் அல்ல கோவிலில்'' என விஷ்வ ஹிந்து பரிஷத் வழக்கறிஞர் பரபரப்பாக வாதாடினார். இதையடுத்து உயர்நீதிமன்றம் அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பெங்கால் சஃபாரி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு பிப்ரவரி 12ம் தேதி ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. விலங்கு மாற்ற நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த 2 சிங்கங்கள் திரிபுராவின் செபஹிஜாலா உயிரியல் பூங்காவில் இருந்து சிலிகுரி பெங்கால் சஃபாரி பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்துக்கு 'அக்பர்' என்றும், 6 வயது நிரம்பிய பெண் சிங்கத்துக்கு 'சீதா' என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் 2 சிங்கங்களை ஒன்றாக அடைக்கவும், அந்த சிங்கங்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்பான விஎச்பி எனும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்தது.
மேலும் பெண் சிங்கத்துக்கு ‛சீதா' என பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் என்று இந்து அமைப்பு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடியது. இதுதொடர்பான மனுவில், ‛‛பிப்ரவரி 8ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு சிலிகுரி பெங்கால் சஃபாரி பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. பெண் சிங்கத்திற்கு 'சீதா' என்று பெயரிட்டுள்ளார். சிங்கத்திற்கு 'சீதா' என்ற பெயரை பயன்படுத்துவதன் மூலம் சனாதன தர்மத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இருக்கிறது.
சிங்கத்துக்கு ‛சீதா' என பெயர் வைப்பது நியாயமற்றது. இது இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கடவுளின் பெயரை சிங்கத்துக்கு வைப்பது என்பது தெய்வ நிந்தனை செய்வதற்கு சமமானதாகும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா விசாரித்தார்.
அப்போது, ‛‛பாசத்தின் அடிப்படையில் சிங்கங்களுக்கு இப்படி பெயர் சூட்டலாம். அதனை எப்படி நீங்கள் அவதூறு என நினைக்கலாம். இது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து மாறுபடும். சிங்கத்துக்கு சீதா என பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது'' என கேள்வி எழுப்பினார். அதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதிலளித்தார்.
அப்போது, ‛சீதாவை நாங்கள் தெய்வமாக வழிப்பட்டு வருகிறோம். சிங்கத்துக்கு சீதா என பெயரிட்டது இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. இன்று சிங்கத்துக்கு இப்படி பெயர் வைத்தவர்கள் நாளை கழுதைக்கு ஏதாவது தெய்வத்தின் பெயரை வைக்கலாம். இதனை தடுக்க வேண்டும். மேலும் நாங்கள் சீதாவை வணங்குகிறோம். அவர் கோவிலில் தான் இருக்க வேண்டும். காட்டில் அல்ல'' என வாதிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில், ‛‛இந்து தெய்வமான துர்கா தேவியின் காலடியில் சிங்கம் உள்ளது. துர்கா பூஜையின்போது சிங்கம் இடம்பெறுகிறது. இந்த சிங்கமும் அனைவராலும் வணங்கப்படுகிறதே?.'' என கேள்வி எழுப்பினார். அதற்கு, விஎச்பி வழக்கறிஞர், ‛‛சிங்கம் துர்கா தேவியின் காலடியில் இருப்பது உண்மை தான். அது தீயவர்களை விரட்டி தீமையை தடுப்பதற்காக தான். மேலும் சிங்கத்துக்கு பெயர் வைத்து வழிபடுவது இல்லை. சிங்கத்தை வணங்கும் வகையில் பூஜைகளில் எந்த மந்திரங்களும் உச்சரிக்கப்படுவது இல்லை'' என்றார்.
இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் தேப்ஜோதி சவுத்ரி, ‛‛நாங்கள் சிங்கங்கள் உள்பட பிற விலங்களுக்கு எந்த பெயரும் வைக்கவில்லை'' என்றார். இதை கேட்ட நீதிபதி அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications