ராமர் கோவில் முதல் பாகிஸ்தான் தலையீடு வரை.. குஜராத் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பிடித்த விஷயங்கள்!
ராமர் கோவில் தொடங்கி பாகிஸ்தான் வரை சில முக்கிய விஷயங்கள் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் தவிர்க்க முடியாத பங்கு வகித்தது.
அஹமதாபாத்: குஜராத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. குஜராத் சட்டசபையின் 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு 14ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது.
இந்த குஜராத் தேர்தலுக்காக பல முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த பிரச்சாரத்தில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாத அங்கம் வகித்தது.
ராமர் கோவில் பிரச்சனை மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டது. அதேபோல் குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் பங்கு இருக்கிறது என்று கூட குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ராமர் கோவில்
பிரச்சாரத்தில் ராமர் கோவில் பிரச்சனை குறித்து பாஜக அதிகம் பேசியது. மோடி தொடங்கி அனைத்து முக்கிய தலைவர்களும் இதுகுறித்து தங்கள் மேடைகளில் பேசினார்கள். ராமர் கோவில் பிரச்சனையில் காங்கிரஸ் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரச்சாரத்தில் பேசினார்கள். 'தான்துக்கா' என்ற பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி ''காங்கிரஸ் ராமர் கோவிலை நினைத்து பயப்படுகிறது. ராமர் கோவில் காரணமாக தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று நினைக்கிறது'' என்று பேசியிருந்தார்.

மணிசங்கர் ஐயர்
மோடியை மணிசங்கர் ஐயர் இழிவான மனிதர் என்று கூறியது இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விவாதமாக மாறியது. இதையடுத்து ராகுல காந்தி உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மணிசங்கர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். தற்போது ராகுல் காந்தி மணிசங்கர் ஐயரை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்து இருக்கிறார். மேலும் மணிசங்கர் ஐயர் தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தலையீடு
இந்த தேர்தலில் பாகிஸ்தானின் மறைமுறைக தலையீடு அதிகமாக இருப்பதாக மோடி குற்றச்சாட்டு வைத்து இருந்தார். காங்கிரஸிற்கு பின்னால் இருந்து பாகிஸ்தான் இயக்குகிறது என்று கூட குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பாகிஸ்தான் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் இந்தியாவில் நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் பாகிஸ்தானை குறை சொல்ல கூடாது என்றும் கூறியிருந்தனர்.

மூன்று முக்கிய நபர்கள்
ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவாணி, அல்பேஷ் தாக்குர் ஆகியோர் குஜராத் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிப்பார்கள். குஜராத் தேர்தல் முடிவுகளை மாற்றும் வல்லமை படைத்தவர்கள் என்று இந்த மூன்று நபர்களும் பார்க்கப்படுகிறார்கள். முக்கியமாக இவர்கள் பிரச்சாரத்திலும் முக்கிய பங்கு வகித்தார்கள். மேலும் இவர்கள் மூவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோஷியல் மீடியா
களத்தில் எப்படி தேர்தல் பிரச்சாரம் சூடாக இருந்ததோ அதே போல் சமூக வலைத்தளங்களிலும் தேர்தல் பிரச்சாரம் சூடாக இருந்தது. காங்கிரஸ் ''குஜராத் வளர்ச்சி மிகவும் தவறான பாதையில் சென்றுவிட்டது'' என்று குஜராத் மாடல் குறித்து சமூக வலைத்தளங்களில் பேசியது. இதற்கு பதிலடியாக ''நான்தான் வளர்ச்சி, நான்தான் குஜராத்'' என்று பாஜக பிரச்சாரம் செய்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications