Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைக்கு ரூ.50 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தலைவர் சுட்டு கொலை! ஆந்திராவில் திக்திக்

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் இன்று நடந்த என்கவுண்டரில் முக்கிய மாவோயிஸ்ட் தளபதியான மாத்வி ஹிட்மா சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீது 26 தாக்குதல்களை நடத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. இன்று நடந்த என்கவுண்டரில் மொத்தம் ஆறு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு பல காலமாகவே நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில காலமாக இந்த நடவடிக்கைகளைத் தீவிரம் காட்டி வருகிறது. ஒரு பக்கம் மனம் திருந்தி வரும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் அதேநேரம் மற்றொரு புறம் என்கவுண்டர் நடவடிக்கைகளும் தீவிரமாகியுள்ளது.

Top Naxal Commander Madvi Hidma Killed Mastermind Behind 26 Deadly Attacks Neutralized in Andhra

மாவோயிஸ்ட் தலைவர்

இதற்கிடையே இன்று ஆந்திரப் பிரதேசத்தில் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் ஒரு இடத்தில் முக்கிய மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். அப்போது மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது.

ரூ.50 லட்சம்

இந்தச் சம்பவத்தில் மொத்தம் ஆறு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக முக்கிய மாவோயிஸ்ட் தளபதியான மாத்வி ஹிட்மா இதில் சுட்டுக் கொல்லப்பட்டார். பல மாவோயிஸ்ட் தாக்குதல்களில் தொடர்புடைய இவரது தலைக்கு ஏற்கனவே ரூ. 50 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 43 வயதான ஹிட்மா, 2010ல் நடந்த தண்டேவாடா தாக்குதல் மற்றும் 2013ல் நடந்த ஜிராம் பள்ளத்தாக்கு படுகொலை போன்ற பல கொடூர தாக்குதல்களை நடத்தியவர். பாதுகாப்புப் படையினர் நீண்டகாலமாகவே இவரைத் தேடி வந்தனர்.

இந்த என்கவுண்டரில் ஹிட்மாவுடன் அவரது இரண்டாவது மனைவி ராஜே (ராஜாக்கா) மற்றும் அவரது காவலர்களும் கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேசம்-சத்தீஸ்கர்- ஒடிசா எல்லைக்கு அருகே மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவலின் பேரில் இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டது. ஹிட்மாவுக்கு ராணுவ உத்தி மற்றும் கெரில்லா போர் திறன்கள் அத்துப்படி. இதன் காரணமாகவே அவர் மிகவும் ஆபத்தான மாவோயிஸ்ட் தளபதிகளில் ஒருவராக அறியப்பட்டார். அவரது அனுபவம், காட்டுப் பகுதி குறித்த ஆழமான புரிதல் காரணமாக, பாதுகாப்புப் படையினர் கையில் சிக்காமல் இருந்து வந்தார்.

யார் இவர்

சத்தீஸ்கரின் சுக்மாவில் 1981இல் பிறந்த ஹிட்மா, மாவோயிஸ்ட்டுகளின் மிகவும் ஆபத்தான தாக்குதல் பிரிவான மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் முதல் பட்டாலியனின் தலைவராக இருந்தார். சிபிஐ எனப்படும் மாவோயிஸ்ட் மத்தியக் குழுவின் இளைய உறுப்பினராகவும், பஸ்தர் பிராந்தியத்திலிருந்து இந்தக் குழுவில் இணைந்த ஒரே பழங்குடியினராகவும் அவர் இருந்தார்.

2010 தண்டேவாடா தாக்குதலில் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டது, 2013 ஜிராம் பள்ளத்தாக்கு படுகொலையில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டதும் உட்படப் பல தாக்குதல்களுக்கு ஹிட்மா மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. 2021 சுக்மா-பிஜாப்பூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த தாக்குதலிலும் இவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் 22 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்திருந்தனர்.

சுட்டு கொலை

அந்தளவுக்கு ஆபத்தான மாவோயிஸ்ட் தலைவராக இருந்த ஹிட்மாவை சுட்டு கொன்ற பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார். மத்திய அரசு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஹிட்மாவை கொல்லுமாறு பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா காலக்கெடு விதித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மார்ச் 31, 2026க்குள் இந்தியாவில் மாவோயிஸ்ட்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற இலக்கையும் அவர் நிர்ணயித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+