நவாஸ் ஷெரீப் பிறந்த நாள், பேத்தி திருமணம்... இரட்டை கொண்டாட்டம்..... மோடி நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தமக்கு அளித்த வரவேற்பு, உபசரிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் செல்வதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார் பிரதமர் மோடி. ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து நேராக லாகூர் சென்றார் பிரதமர் மோடி.

'Touched By The Warmth', Says PM Modi

பின்னர் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு விருந்தளிக்கப்பட்டது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானைச் சென்றடைந்தபோது லாகூர் விமான நிலையத்தில் என்னை நவாஸ் ஷெரீப் வரவேற்றார். திரும்பி வரும்போதும் அந்த விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

அவரது உபசரிப்பு எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயுடனான சந்திப்புகளை நினைவுகூர்ந்த நவாஸ் ஷெரீஃப் , அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறினார்.

நவாஸ் ஷெரீஃபின் பிறந்த நாள், அவரது பேத்தியின் திருமணம் என இரட்டைக் கொண்டாட்டமாக இந்த நாள் அமைந்தது.

இவ்வாறு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+