கேரளாவுக்கு 'டூர்' வந்த குஜராத் இளம்பெண்ணை மிதித்துக் கொன்ற யானை
இடுக்கி: கேரளாவில் குஜராத்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியை யானை மிதித்துக் கொன்றுள்ளது.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள நான்தத்தைச் சேர்ந்தவர் தீபாலி(27). அவர் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் வந்தார். இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள இருட்டுக்கானத்திற்கு சென்று சுற்றிப் பார்த்தார்.

அப்போது அவர் தனியாருக்கு சொந்தமான யானை சவாரி பூங்காவுக்கு இன்று சென்றார். அங்கு அவர் யானையை போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அந்த யானை தனது தும்பிக்கையால் அவரை தாக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை யானை மிதித்துக் கொன்றது.
இந்த சம்பவத்தால் அவருடன் வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தீபாலியின் உடல் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை விமானம் மூலம் குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இடுக்கி மாவட்டத்தை சுற்றிப்பார்க்க தீபாலி 14 பேர் கொண்ட குழுவாக கேரளா வந்தார். வந்த இடத்தில் அவரை யானை கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications