டெல்லியில் அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம்.. சுற்றுலா கைடு அட்டூழியம்… 5 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
இந்தியாவிற்கு வந்த அமெரிக்க பெண் பயணியை கைடு உட்பட 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
டெல்லி: அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு வந்த பெண் பயணி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இது தொடர்பாக, அவருக்கு கைடாக இருந்தவர் உட்பட 5 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் டூரிஸ்டாக அமெரிக்க பெண் ஒருவர் டெல்லி வந்துள்ளார். அவர் கான்னாட் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். தான் தங்கி இருக்கும் ஓட்டல் நிர்வாகத்தின் மூலமாகவே ஒரு டூரிஸ்ட் கைடை ஏற்பாடு செய்துக் கொண்டு நகரத்தை சுற்றிப் பார்த்து வந்துள்ளார். டூரிஸ்டு கைடும் நகரத்தை சுற்றி காண்பித்துள்ளார்.

ஒரு நாள், அமெரிக்க பெண் தங்கி இருக்கும் ஓட்டல் அறைக்கே தன்னுடைய நண்பர்கள் சிலரையும் அழைத்து வந்து சுற்றிப் பார்ப்பதற்கான வழிகளை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று டூரிஸ்ட் கைட் கூறியிருக்கிறார். இதனை உண்மை என்று நம்பிய அமெரிக்க பெண்மணி ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அறைக்குள் வந்த டூரிஸ்ட் கைடு உட்பட ஐந்து பேரும், அவருடன் நன்றாக பேசி இருந்துவிட்டு, சட்டென பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத அமெரிக்க பெண்மணி, மிரண்டு போய் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்றுவிட்டார். சொந்த நாட்டிற்கு சென்ற பிறகு அவர் தன்னுடைய குடும்பத்தாரிடம் நடந்த சம்பவம் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து மன அழுத்தத்திலேயே இருந்துள்ளார். பின்னர், அவர் தனது வக்கீல் தோழியிடம் இதுகுறித்து பேசியுள்ளார்.
பின்னர், அமெரிக்க பெண் இ-மெயில் மூலம் புகார் ஒன்று டெல்லி போலீசாருக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொண்ட டெல்லி போலீசார், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான அனைத்து விவரங்களை கேட்டுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications