ஊழல் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் 'குன்கா' தீர்ப்பு

அரசியலில் இருந்து கிரிமினல்களை அகற்றுவது குறித்து நாடு முழுவதும் தீவிரமாக பேசப்பட்டு வருகிற காலம்.. கடந்த ஆண்டுதான் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி கிரிமினல் அரசியல்வாதிகள் தப்பித்து வந்த சுரங்கப் பாதையை உச்சநீதிமன்றம் ஒழித்துக் கட்டியது.
ஆனாலும் அப்போதைய காங்கிரஸ் அரசு, இதர அரசியல் கட்சிகளுடன் இணைந்து கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டுவர முயற்சித்தது. பின்னர் அவசர சட்டத்தையே கொண்டுவரவும் களமிறங்கியது. ஆனால் காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்ப பின்வாங்கிக் கொண்டது.
இதனால்தான் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா, இனி 10 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. அவருடைய முதல்வர் பதவியும் பறிபோயிருக்கிறது.
4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி குன்கா, தமது தீர்ப்பில் ரூ100 கோடி அபராதம் விதித்திருப்பதை நிச்சயம் எவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. இந்த தீர்ப்பு வெளியான நொடியிலேயே ரூ53 கோடிக்கே ரூ100 கோடி அபராதம் எனில் அந்த வழக்குக்கு .. இந்த வழக்குக்கு அபராதங்கள் எவ்வளவு இருக்கும் என்ற வாத பிரதிவாதம் மக்களிடத்தில் மட்டுமே எழுந்திருக்கும் என்று சொல்ல முடியாது.. அத்தகைய வழக்குகளில் சிக்கிய கிரிமினல் அரசியல்வாதிகளிடமும் எழுந்திருக்கவே செய்யும்.
அத்துடன் நாட்டை உலுக்கிய ஊழல் வழக்குகளை ஏன் நீதிபதி குன்காவிடமே ஒப்படைத்துவிடக் கூடாது என்ற ஒரு பார்வையும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட பிரதமரும் இதர மாநில முதல்வர்களும் கிரிமினல்களை அமைச்சராக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி குன்கா வெளியிட்டிருக்கும் தீர்ப்பு, ஊழல்- கிரிமினல் அரசியல்வாதிகள் இனி பொதுமக்கள் பணத்தை சூறையாடுவதை தடுக்கின்ற பிரம்மாஸ்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் விருப்பம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications