உ.பியில் விஷ சாராயபலி 42 ஆக உயர்வு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டத்தின் முபாரக்பூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 17 ஆம் தேதி கூரா சவுகான் என்பவர் விஷச்சாராயம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
அவரிடம் இருந்து அக்கம்பக்கத்தில் உள்ள 8 கிராமங்களை சேர்ந்த பலர் சாராயம் குடித்துள்ளனர். சாராயம் குடித்தவர்களில் நேற்று முன்தினம் வரை 32 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில், சாராயம் குடித்தவர்களில் மேலும் 10 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், இது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் சிங் உள்பட 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், சாராயம் உற்பத்தி செய்யும் இடங்களில் கடுமையான ஆய்வு நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகம், முபாரக்பூர் காவல் நிலைய அதிகாரி விஸ்வநாத் உள்பட 6 போலீசாரை சஸ்பெண்ட் செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications