ஒரே டிராபிக் ஜாம்: ஆபீஸுக்கு லேட்டா வருபவர்களின் டயலாக்
பெங்களூர்: அலுவலகத்திற்கு தாமதமாக வருபவர்களில் பெரும்பாலானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக காரணம் சொல்வதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
வேலைக்கு செல்வோர்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் 24, 262 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வதற்கான காரணம் உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்
அலுவலகத்திற்கு தாமதமாக வருவோரில் 54 சதவீதம் பேர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக காரணம் சொல்கின்றனர். அவ்வாறு தாமதமாக வருவோரில் 76 சதவீதம் பேர் கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்களாம்.

புகைப்பிடித்தல்
வேலை நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க புகைப்பிடிப்பது சிறந்த வழி என்று பலர் தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 82 சதவீதம் பேர் தினமும் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட சிகெரட்டுகளை ஊதித் தள்ளுகிறார்களாம். அதே சமயம் வேலை பாதிக்கும் என்றால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட 24 சதவீதம் பேர் தயாராக உள்ளனர்.

வேலையில் நிறைவு
கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் வெறும் 30 சதவீதம் பேர் மட்டுமே தாங்கள் பார்க்கும் வேலையில் நிறைவு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் நிறைவு இல்லாமல் வேலை பார்க்கிறார்கள்.

பாஸ்
என்ன தான் போட்டி இருந்தாலும் உயர் அதிகாரிகளுடன் ஒத்துப் போனால் தான் வேலையில் உத்திரவாதம் இருப்பதாக 41 சதவீதம் பேர் நம்புகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications