'கே' கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் எய்ம்ஸ் டாக்டர் ப்ரியா தற்கொலை
டெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக இருந்தவர் ப்ரியா வேதி(31). அவருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கமல் வேதி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு தான் கமல் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது ப்ரியாவுக்கு தெரிய வந்தது. இருப்பினும் அவர் அதை பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ப்ரியா வீட்டை விட்டு வெளியேறி டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். ஃபேஸ்புக்கில் தனது கணவர் மனிதர் அல்ல பேய் என்றும், இனியும் அவர் தன்னை மன ரீதியாக செய்யும் கொடுமைகளை ஏற்க முடியாது என்றும் தெரிவித்த ப்ரியா தனது கை நரம்பை நறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என்று கமல் சனிக்கிழமை அதிகாலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ப்ரியாவை தேடிக் கொண்டிருக்கையில் ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கதவை திறக்கவில்லை என்று போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்று கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. உடனே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ப்ரியா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அந்த அறையில் தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதிய கடிதம் இருந்தது.
அந்த கடிதம் மற்றும் ப்ரியாவின் ஃபேஸ்புக் பதிவை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் கமல் வேதியை கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications