நாங்கள் குற்றம் செய்யவில்லை - திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் கதறல்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் விவகாரத்தில் செய்யாத குற்றத்திற்காக நாங்கள் வேதனையை அனுபவித்து வருகிறோம் என்று திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கவுரிபாய் கூறினார்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் தொடர்பாக தினம் தினம் பல்வேறு தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. கோயில் ரகசிய அறையில் இருந்து ஏராளமான பொக்கிஷங்கள் கடத்தப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த கோயிலை நிர்வாகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கும் இந்த கடத்தலில் பங்கு இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
மன்னர் குடும்பத்தினரை கோயில் நிர்வாக பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோபால் சுப்பிரமணியன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து கோயிலை நிர்வாகம் செய்ய மாவட்ட நீதிபதி இந்திரா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன் கோயில் பொக்கிஷத்தை கணக்கிடுவதற்காக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த போய் தலைமையிலான கமிட்டியை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த கமிட்டி பி அறையை தவிர மற்ற அறைகளை திறந்து பொக்கிஷங்களை மதிப்பீட்டது.
கோபால் சுப்பிரமணியன் அறிக்கை பரபர்பபு அடங்குவதற்குள் முன்னாள் மதிப்பிட்டு குழு தலைவரான ஆனந்த்போசும் மன்னர் குடும்பத்தினர் ரகசிய அறைகளில் இருந்த பொக்கிஷங்களை கடத்தியதாக கடந்த சில தினங்களுக்கு முன் கூறினார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
இதுகுறித்து மன்னர் குடும்பத்தை சேர்ந்த கவுரி லட்சுமிபாய் கூறுகையில், பத்மநாபசாமி கோவிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அவருக்கே சொந்தம். எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாரும் கோயிலில் இருந்து எந்த பொருட்களையும் கடத்தவில்லை. எங்களுக்கு பொக்கிஷங்களை கடத்த வேண்டிய அவசியமும் இல்லை. செய்யாத குற்றத்திற்காக எஙகள் குடும்பம் வேதனையை அனுபவித்து வருகிறது. எங்கள் வேதனையை பத்மநாபசாமி முன் சமர்ப்பிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் எங்கள் விளக்கத்தை தெரிவிப்போம் என்று கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications