மகளைப் பலாத்காரம் செய்ய முயற்சித்த இளைஞரை ஆணுறுப்பை வெட்டி கொடூரமாகக் கொன்ற தாய்!

Subscribe to Oneindia Tamil

திஸ்பூர்: தன்னையும், தன் மகளையும் பலாத்காரம் செய்ய முயற்சித்த இளைஞரைக் கொடூரமாகக் கொன்று, புதைத்த பழங்குடியினப் பெண்ணை அஸ்ஸாம் போலீசார் கைது செய்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் சாரியலி மாவட்டத்திலுள்ள பரஜுலி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா என்ற இளைஞர். இவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி நள்ளிரவில் திடீரென மாயமானார் கிருஷ்ணா. இது தொடர்பாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ரீட்டா மற்றும் அவரது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

Tribal woman chops off man's genitals, kills him for attempting to rape daughter

மேற்கொண்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிருஷ்ணாவைக் கொலை செய்தததை ஒப்புக் கொண்டார் ரீட்டா. போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘சம்பவத்தன்று நள்ளிரவில் கிருஷ்ணா ரீட்டாவையும், அவரது மகளையும் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக' அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கையில் கிடைத்த கோடாரியால் கிருஷ்ணாவைத் தாக்கியுள்ளார் ரீட்டா. இதில் கிருஷ்ணா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். ஆனாலும், ஆத்திரம் தீராத ரீட்டா, கிருஷ்ணாவின் ஆணுறுப்பை துண்டுத்துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் அவரைக் கொலை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது கிராமத்திலுள்ள ஏழு பெண்களை அழைத்து வந்து, நடந்த சம்பவங்களை விளக்கியுள்ளார். பின்னர் அவர்களது உதவியுடன் கிருஷ்ணாவின் உடலை புதைத்துள்ளனர்.

தற்போது உண்மையை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து ரீட்டாவையும், அவரது கணவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கிருஷ்ணாவைப் புதைத்த இடத்தை ரீட்டா அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணாவின் உடலைத் தோண்டியெடுத்த போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+