பெங்களூர் சிறுவன் உயிரைக் காப்பாற்றிய திருச்சி பெண்ணின் ‘கல்லீரல்’

இறந்த பின்பு மண்ணோ, நெருப்போ தின்னப்போகும் உடல் உறுப்புகளை மூளைச்சாவு அடைந்த நிலையில் மற்றவர்களுக்கு பொருத்துவதன் வாயிலாக மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.
அதிலும், உடல் உறுப்புத் தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அந்தவகையில், பிறவியிலேயே கல்லீரல் நோயால் பாதிக்கப் பட்ட சிறுவன் ஒருவனுக்கு திருச்சி பெண்ணின் கல்லீரல் பொருத்தப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் அக்ஷய், கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கும் மேலாக மாற்று கல்லீரல் வேண்டி, பதிவு செய்து காத்துக் கொண்டிருந்தான். இந்நிலையில், திருச்சியில் விபத்தொன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கல்லீரல் அவனுக்காக பரிந்துரைக்கப் பட்டது.
கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சையின் பலனாக மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கல்லீரல் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின் தற்போது குணம்டைந்து பள்ளி சென்று வரும் அக்ஷய், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளான்.
கடினமான அறுவைச் சிகிச்சை மூலம் தனது மகனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கும், கல்லீரல் தானம் செய்த பெண்ணின் குடும்பத்தாருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர் அக்ஷயின் பெற்றோர்கள்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications