நாளை தேர்தல்..திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி! கலங்கும் மா.கம்யூ-காங். கூட்டணி! பரபர கருத்துகணிப்பு
திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய ஜான் கி பாத் கருத்து கணிப்பில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகர்தலா: திரிபுராவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்கு முந்தைய ‛ஜான் கி பாத்' கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக 35 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சமாக 16 இடங்கள் மட்டுமே நடக்கும் என அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி வாய்ப்பு இல்லை எனவும் அந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் 9 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, மிசோராம், கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்கள் இந்த ஆண்டு தேர்தலை சந்திக்கின்றன. முதற்கட்டமாக வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் 2023ல் முதல் முதலாக திரிபுராவில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநில தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுக்கள் மார்ச் 2ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

திரிபுராவில் பாஜக ஆட்சி
திரிபுராவில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணிக்கு மொத்தம் 44 பேர் எம்எல்ஏக்களாக உள்ள நிலையில் பாஜக முதல்வராக மானிக் சாகா உள்ளார். இந்நிலையில் தான் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்தது.

4 முனை போட்டி
திரிபுராவில் தற்போது நான்குமுனை போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக-ஐபிஎப்டி கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் மாநில கட்சியான திப்ரோ மோத்தா கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என மொத்தம் நான்குமுனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 60 தொகுதிகளல் 28.13 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் மொத்தம் 20 பெண்கள் உள்பட 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜக 55 இடங்களிலும், கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 5 இடங்களிலும் போட்டியிடுகிறது. மற்றொரு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மாநில கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதுதுவிர திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் போட்டியிடுகிறது.

ஜான் கி பாத் கருத்து கணிப்பு
இந்நிலையில் தான் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்பை ஜான்கிபாத் (Jan Ki Baat) மேற்கொண்டது. திரிபுராவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வசித்து வரும் 10 ஆயிரம் பேரிடம் ஜான் கிபாத் கருத்து கேட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என ஜான் கி பாத் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

மீண்டும் பாஜக ஆட்சி
அதாவது நடைபெற உள்ள தேர்தலில் பாஜக கூட்டணி 30 முதல் 35 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டணி 13 முதல் 16 இடங்களில் வெற்றி பெறும் எனவும், திப்ரா மேமத்தா கட்சி 11 முதல் 13 இடங்களில் வெற்றி பெறும் எனவும், பிற கட்சி ஒரு இடத்தில் வாகை சூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் பாஜக கூட்டணி 39 முதல் 42 சதவீத ஓட்டுக்களை பெறும் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி 38 முதல் 41 சதவீத ஓட்டுக்களை பெறும் எனவும், திப்ரா மோத்தா கட்சி 16 முதல் 21 சதவீத ஓட்டுக்களை பெறும் னெவும் மற்றவர்கள் 1 முதல் 2 சதவீத ஓட்டுகளை பெறுவார்கள் எனவும் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

கடந்த முறை பலித்த கருத்து கணிப்பு
கடந்த 2018 தேர்தலின்போது நியூஸ் எக்ஸ் மற்றும் ஜான் கி பாத் இணைந்து திரிபுராவில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டது. இது அப்படியே நிகழ்ந்தது. அந்த கருத்து கணிப்பில் பாஜக 35 முதல் 45 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்ட நிலையில் பாஜக 44 இடங்களை கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 14 முதல் 23 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சி 16 இடங்களை வென்றது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications