திரிபுரா: பாஜகவுக்கு கம்யூனிஸ்டுகள் டஃப் பைட் : காங்- கூட்டணி ஒர்க் அவுட் ஆனது- எக்ஸிட் போல் டமால்!
திரிபுராவில் இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி பாஜகவுக்கு சவால் விடுக்கும் வகையில் கணிசமான இடங்களை கைப்பற்றி வருகிறது.
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் போட்டியை தந்து கொண்டிருக்கிறது கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் கூட்டணி. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கம்யூனிஸ்டுகள்- காங்கிரஸ் கூட்டணிக்கு 3-வது இடம் கிடைக்கும் என கணித்ததை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தகர்த்து கொண்டிருக்கின்றன.
மேற்கு வங்கம் எப்படி ஒருகாலத்தில் இடதுசாரிகள் கோட்டையாக இருந்ததோ அதேபோல திரிபுராவும் இருந்தது. திரிபுராவில் 25 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சிதான். திரிபுராவில் இடதுசாரிகள் ஆளும் கட்சி; காங்கிரஸ் எதிர்க்கட்சி.
கடந்த 2018 சட்டசபை தேர்தலுக்கு முன்புவரை திரிபுராவில் பாஜக என்பதே இல்லாத நிலை. ஆனால் காங்கிரஸில் கணிசமானோர் அப்படியே பாஜகவுக்கு தாவியதால் அக்கட்சி உயிர்பெற்றுவிட்டது. 2018 தேர்தலில் இடதுசாரிகளை வீழ்த்தி பாஜக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவிடம் இடதுசாரிகள் தங்களது எஃகு கோட்டையை பறிகொடுத்தது மிகப் பெரும் பின்னடைவாகும்.

இதனால் இந்த தேர்தலில் காலந்தோறும் எதிரியாக இருந்த காங்கிரஸுடன் இடதுசாரி கட்சிகள் கை கோர்த்தன. பாஜகவை வீழ்த்த இடதுசாரிகள், காங்கிரஸ் கை கோர்த்த நிலையில் புதிய வரவாக திர்ப்ரா மோத்தா கட்சி களமிறங்கியது. இதனால் திரிபுரா மாநிலத்தில் வலிமையான மும்முனைப் போட்டி உருவானது.
திரிபுரா தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும், ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும்; 2-வது இடம் அகன்ற திப்ராலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தும் திப்ரா மோதாவுக்குதான் கிடைக்கும். இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணிக்கு 3-வது இடமே கிடைக்கும் என கணித்தன.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் திரிபுராவில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலையில்தான் இருந்து வருகிறது. முதலில் சிறிது நேரம் திப்ரா மோதா 2-வது இடத்தில் இருந்தது. பின்னர் இடதுசாரிகள்- காங்கிஅஸ் கூட்டணி 2-வது இடத்துக்கு முன்னேறியது. தற்போதைய நிலையில் பாஜக 30 இடங்களிலும் இடதுசாரிகள் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களிலும் திப்ரா மோதா 11 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் 31.
அத்தனை கருத்து கணிப்புகளும் இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணிக்கு 3-வது இடம் என அடித்து ஆரூடம் கூறின. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளோ ஆரூடங்களை தகர்த்து இடதுசாரிகள்- காங்கிரஸின் விஸ்வரூபத்தை உறுதி செய்து கொண்டிருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications