போட்டி போட்டுக் கொண்டு ராம் நாத்தை ஆதரிக்கும் அதிமுக.. பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸை அடுத்து தினகரனும் ஆதரவு
ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தனது ஆதரவை அளித்துள்ளார் டிடிவி தினகரன்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. அதே போன்று போன்று எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பழனிச்சாமி அணி ஆதரவு
இந்நிலையில் அதிமுக தங்களது அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழக முதல்வருக்கு தொலைபேசியில் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து முதல்வர் பழனிச்சாமி ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக அறிவித்தார்.

ஓபிஎஸ் டீம்
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது. இதுகுறித்து ஓபிஎஸ், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேட்டுக் கொண்டதை அடுத்து ராம்நாத்தை ஆதரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிடிவி டீம்
இதனையடுத்து, இன்று அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சசியின் ஆணைக்கிணங்க..
அதில் சசிகலாவின் ஆணைப்படி பாஜக வேட்பாளரை அதிமுக அம்மா அணி ஆதரிக்கிறது. அதிமுக அம்மா அணி எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ராம்நாத்துக்கு வாக்களிப்பார்கள். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ராம்நாத்திற்கு வாக்களிப்பார்கள் என்று தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி
அதிமுகவில் பிரிந்து கிடக்கும் 3 அணிகளும் ராம் நாத் கோவிந்த்தை ஆதரித்துள்ளது. இதில் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் டெல்லி சென்று ராம் நாத் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications