சசிகலாவை சந்திக்கவில்லையாம்... இளவரசியை மட்டும் தான் பார்த்தாராம்..!
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்கவில்லை, இளவரசியை மட்டும் தான் பார்த்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் இன்று மீண்டும் சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் சசிகலாவை சந்திக்கவில்லை என்றும் இளவரசியை மட்டும் தான் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசலும், குழப்பமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஓரம்கட்டிவிட்டது அம்பலமாகியுள்ளது.

ஆட்சி மற்றும் கட்சியின் அதிகார மையம் யார் என்பதை வைத்தே மோதல் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடியை ஏன் முதல்வராக்கினோம் என சசிகலா தரப்பு யோசிக்கும் அளவுக்கு உள்ளது எடப்பாடியின் அதிரடிகள்.
எதிலும் சசிகலாவையோ தினகரனையோ கலக்காமல் முடிவுகளை அறிவித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது சசிகலா மற்றும் தினகரன் தரப்புக்கு பெரும் அதிருப்தியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று மீண்டும் சந்திப்பதாக தகவல் வெளியானது. கடந்த செவ்வாய்க்கிழமை தான் லோக்சபா துணை சபாநாயகரான தம்பிதுரையும், டிடிவி தினகரனும் சசிகலாவை சந்தித்தனர்.
இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்குள் தினகரன் சசிகலாவை சந்தித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்கவில்லை, இளவரசியை மட்டும்தான் சந்தித்தேன் என கூறியுள்ளார்.
மேலும் சசிகலா கூறியதால் தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications