For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசின் 'பாரத் நிர்மாண்' திட்ட விளம்பரம் மூலம் ரூ78 கோடி வருவாய் ஈட்டிய டிவி சேனல்கள்

By Mathi
Google Oneindia Tamil News

TV channels to get Rs. 780 mn of ad revenue from government’s Bharat Nirman campaign
டெல்லி: மத்திய அரசின் பாரத் நிர்மாண் திட்டத்தை விளம்பரப்படுத்தியதன் மூலம் ரூ78 கோடியை தொலைக்காட்சி சேனல்கள் வருவாயாக பெற்றிருக்கின்றன.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கிராமப்புற மேம்பாடு தொடர்பான 'பாரத் நிர்மாண்' திட்டங்களை தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது. தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டிருந்தன.

2014ஆம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இத்திட்ட விளம்பரத்துக்காக மட்டும் ரூ185 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது. இதில் தொலைக்காட்சிகளுக்கு மட்டும் ரூ78 கோடி செலவிடப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ், என்டிடிவி, ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் சி.என்.என்.- ஐபிஎன் ஆகிய 4 ஆங்கில தொலைக்காட்சிகள் கடந்த 7 மாத காலமாக இந்த விளம்பரத்தை ஒளிபரப்பியதன் மூலம் ரூ9.6 மில்லியன் வருவாய் ஈட்டியிருக்கிறது. இதில் சி.என்.என்.- ஐபிஎன் தொலைக்காட்சிக்குத்தான் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது.

ஆங்கில தொலைக்காட்சிகள் ஈட்டிய வருவாய் விவரம்: சி.என்.என்.- ஐபிஎன் - ரூ3.07 மில்லியன், என்.டி.டி.வி- ரூ2.5மில்லியன், டைம்ஸ் நவ்- ரூ2.46 மில்லியன், ஹெட்லைன்ஸ் டுடே- ரூ1.5 மில்லியன்.

English summary
The Congress-led UPA (United Progressive Alliance) government has earmarked an advertising expenditure of Rs. 78.01 crore (Rs 780.1 million) for television channels to promote its rural development policy ‘Bharat Nirman’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X