ராதே மாவால் அடித்துக் கொண்ட விஐபிக்கள்... டிவி லைவ் ஷோவில் அரங்கேறிய கூத்து!
டெல்லி: சர்ச்சை சாமியார் ராதே மா குறித்த பேச்சால், டிவி நேரடி நிகழ்ச்சியில் பெண் ஒருவரும், ஆண் சாமியாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெண் சாமியாரான ராதே மா மீது வரதட்சணை வழக்கு உட்பட எண்ணற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார் அவர்.
இந்நிலையில், ஐபிஎன் 7 என்ற தொலைக்காட்சியில் ஆஜ் கா முத்தா என்ற விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், ஓம்ஜி என்ற இந்து மகா சபாவைச் சேர்ந்த ஆண் சாமியாரும், ராக்கி பாய் என்ற பெண் ஜோசியரும் கலந்து கொண்டனர்.

குற்றச்சாட்டு...
காரசாரமாக சென்ற விவாதத்தில் சர்ச்சை சாமியார் ராதே மா குறித்த பேச்சு எழுந்தது. அப்போது ராதே மா குறித்து ராக்கி பாய் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஆவேசமான ஓம்ஜி...
அதைக்கேட்டு ஆவேசமடைந்த ஓம்ஜி, ‘நீங்கள் எப்படி ராதே மா குறித்து பேசலாம். முதலில் உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள்' எனக் கூறினார். அதோடு, சில வழக்குகள் குறித்தும் அவர் பேசத் தொடங்கினார்.

உங்களைச் சொல்லவில்லை...
இதனால் ஆத்திரமடைந்த ராக்கி பாய் அவருடன் கடுமையாக வாதிட்டார். அதற்கு ஓம்ஜி, நான் உங்களைச் சொல்லவில்லை. தீபா சர்மா என்பவரைப் பற்றித்தான் சொன்னேன் (அவரும் இதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்) என்றார்.

எச்சரித்த தீபா சர்மா...
மேலும் தீபா சர்மா குறித்து தொடர்ந்தும் அவர் பேசத் தொடங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த தீபா சர்மா, டக்கென எழுந்து ஓம்ஜியிடம் வந்தார். அவரது முதுகைத் தட்டி அமைதியாக இருங்கள். இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று எச்சரிக்கும் தொனியில் கூறினார்.

அடிதடி...
ஆனால் விடாமல் ஓம்ஜி பேசவே அவரை பளார் என ஒரு அறை விட்டார் தீபா சர்மா. இதனால் கொதிப்படைந்த ஓம்ஜியும் அவரை அடித்தார். அத்தோடு அவரது இரு கைககளையும் பிடித்து முறுக்குவது போல வைத்துக் கொண்டு கோபமாக அவருடன் வாதிட்டார்.

மக்கள் அதிர்ச்சி...
தொலைக்காட்சி வாயிலாக விவாத நிகழ்ச்சியை நேரலையாக பார்த்துக் கொண்டிருந்த மக்கள், இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications