ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான்.. கொரோனாவால் அடுத்தடுத்து பலியான இரட்டையர்கள்… மீரட்டை உலுக்கிய சோகம்!
மீரட்டில் இரட்டை சகோதரர்கள் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்
லக்னோ: மீரட் நகரில் இரட்டை சகோதரர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இருவருமே 24 வயதை எட்டிய இளைஞர்கள் ஆவர்..!
கேரளாவை சேர்ந்தவர் கிரிகோரி ரேமண்ட் ரபேல்.. இவரது மனைவி சோஜா.. இருவருமே ஆசிரியர்கள்.. மீரட்டில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியின் டீச்சர்களாக வேலை பார்த்து வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஜோஃப்ரெட் வர்கீஸ் கிரிகோரி, ரால்பிரட் வர்கீஸ் கிரிகோரி என்ற இரட்டை மகன்களும், ஒரு மூத்த மகனும் உள்ளனர். இந்நிலையில், மே 13-ம் தேதி, கிரிகோரி தம்பதியினருக்கு அப்போது போன் ஒன்று வந்துள்ளது..

ஆசிரியர்கள்
இரட்டை மகன்களில் ஒருவரான ஜோஃப்ரெட் வர்கீஸ் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாகவும், இன்னொரு மகன், ரால்பிரட் வர்கீஸ் தொற்று பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போன தம்பதியினர், உடனடியாக கிளம்பி ஆஸ்பத்திரி சென்றனர்.. மகன் உயிரிழந்ததை நினைத்து கதறி கதறி அழுதனர்..

சிகிச்சை
பிறகு, சிகிச்சையில் உள்ள இன்னொரு மகனை பார்க்க வார்டுக்கு சென்றனர். அப்போது, அவர்களை பார்த்ததும், என்ன நடந்தது? ஏன்ம்மா இப்படி இருக்கீங்க? ஏதோ என்கிட்ட மறைக்கிறீங்க? என்று தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ரால்பிரட்டின் உயிர் பரிதாபமாக இருந்தது..

இரட்டையர்கள்
இந்த இரட்டையர்கள் 3 நிமிட இடைவெளியில் பிறந்தவர்களாம்.. ஆனால், 1 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.. இருமகன்களையும் பறிகொடுத்துவிட்டு, பெற்றோர் கதறி அழுதது காண்கோரை நிலைகுலைய வைத்துவிட்டது.

அப்பா
மகன்களை பறிகொடுத்த தந்தை இதை பற்றி சொல்லும்போது, "நாங்க ரொம்ப உடைந்து போயிருக்கோம்.. இரட்டைகள் 2 பேரும் யாருக்குமே எந்த ஒரு தீங்கும் நினைச்சது இல்லை.. ஏப்ரல் 23-ம்தேதி 2 பேருக்கும் ஒன்றாக காய்ச்சல் வந்துள்ளது.. காய்ச்சலுக்கு தொடர்ந்த சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.. ஆனாலும் குணமாகவில்லை..

மீரட்
மே 1ம் தேதி, 2 பேருக்கும் ஆக்ஸிஜன் பிரச்சனை வந்தது.. இதையடுத்து, மீரட்டில் உள்ள ஆனந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்... வென்ட்டிலேட்டரில்தான் வைத்திருக்க முடிந்தது.. மே 10-ம்தேதி கொரோனா ரிப்போர்ட்டில் நெகட்டிவ் என்று வந்தது.. அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தோம்.. அடுத்த 3 நாளில் இப்படி ஒரு கொடுமை நடந்துவிட்டது என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications