தபோல்கர் வழக்கில் திருப்பம்- கொலையை 'ஒப்புக் கொள்ள' ரூ25 லட்சம் கொடுத்ததாக திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

Twist in Dabholkar case; Accused offered Rs 25 Lakh to 'confess
மும்பை: சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் தமக்கும் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விசாரணை அதிகாரிதான் ரூ25 லட்சம் கொடுத்து தம்மை கொலையை ஒப்புக் கொள்ள வற்புறுத்தியதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த நரேந்திர தபோல்கர், சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பும் பணியை மேற்கொண்டு வந்தார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கடுமையான போராடி வந்த அவர் மர்ம நபர்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனால் அவரை கொலை செய்த கொலையாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. இது அம்மாநில அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் திடீரென இந்த கொலை வழக்கில் மணீஷ் நகோரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது மணீஷ் நகோரி என்பவர், தம்மை விசாரணை அதிகாரி ராகேஷ் மிஸ்ரா துன்புறுத்தியும் ரூ25 லட்சம் பணம் கொடுத்தும் இந்த கொலையை ஒப்புக் கொள்ள செய்ததாக தெரிவித்தார்.

மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற நாளில் தாம் மும்பையில் இருந்ததாகவும் நகோரி கூறியுள்ளார். அரசியல் நெருக்கடிகள் காரணமாக விசாரணை அதிகாரி இப்படி தம்மை துன்புறுத்தி நெருக்கடி கொடுத்ததாகவும் நகோரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+