அஜ்மீர் தர்காவுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
ஜெய்பூர்: அஜ்மீர் தர்காவுக்கு வெளியே இருவர் திடீர் என்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்தி தர்கா மிகவும் பிரபலம் ஆனது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள், மக்கள் என தினமும் ஏராளமானோர் தர்காவுக்கு வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில் கோட்டா நகரைச் சேர்ந்த அஸ்வனி குமார் சர்மா என்பவர் அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரது ஊரைச் சேர்ந்த விகாஸ் மற்றும் முகமது அப்ரேஜ் ஆகியோர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அஸ்வனி காயம் அடைந்தார். அஸ்வனிக்கு அப்ரேஜ் வைத்த குறி தவறியதால் விகாஸ் மீது குண்டுபாய்ந்து அவர் காயம் அடைந்தார்.
தர்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்ரேஜ் மற்றும் விகாஸை பிடித்தனர். காயம் அடைந்த அஸ்வனி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நண்பர்களாக இருந்த அப்ரேஜும், அஸ்வனியும் எதிரிகள் ஆகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications